ஸாவரண-ஶ்ரீ-கௌர-பாதபத்மே ப்ரார்தனா
ஶ்ரீ கௌராங்கரின் தாமரைத் திருவடிகளுக்கான பிரார்த்தனை
(பாடல் தொகுப்பு: ப்ரார்தனா)
(1)
ஶ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு தயா கர மோரே
தோமா வினா கே தயாலு ஜகத்-ஸம்ஸாரே
(2)
பதித-பாவன-ஹேது தவ அவதார
மோ ஸம பதித ப்ரபு நா பாஇபே ஆர
(3)
ஹா ஹா ப்ரபு நித்யானந்த, ப்ரேமானந்த-ஸுகீ
க்ருபாபலோகன கர ஆமி போட து:கீ
(4)
தயா கர ஸீதா-பதி அத்வைத கோஸாஞி
தவ க்ருபா-பலே பாஇ சைதன்ய-நிதாஇ
(5)
ஹா ஹா ஸ்வரூப, ஸநாதன, ரூப, ரகுநாத,
பட்ட-ஜுக, ஶ்ரீ-ஜீவ ஹா ப்ரபு லோகநாத
(6)
தயா கர ஶ்ரீ-ஆசார்ய ப்ரபு ஶ்ரீநிவாஸ
ராமசந்த்ர-ஸங்க மாகே நரோத்தம-தாஸ
பாடலின் பொருள்
(1) ஶ்ரீ க்ருஷ்ண சைதன்யரே, என் மீது கருணை கொள்வீராக. தங்களைவிட கருணை வாய்ந்தோர் மூவுலகிலும் கிடையாது.
(2) நிலையிழந்த ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக தாங்கள் அவதரித்துள்ளீர். என்னைவிடத் தாழ்ந்தவனை தங்களால் காண இயலாது.
(3) அன்புள்ள நித்யானந்தரே, தாங்கள் எப்போதும் பிரேமையின் ஆனந்தத்தில் சுகமாக உள்ளீர். நான் மிகவும் துக்கத்தில் இருப்பதால் தங்களிடம் வந்துள்ளேன். என் மீது கருணை காட்டி என்னை மகிழச் செய்யுங்கள்.
(4) அன்புள்ள அத்வைதரே, சீதையின் கணவரே, என் மீது கருணை கொள்வீராக. தங்களுடைய கருணை இருந்தால், சைதன்யர் மற்றும் நித்யானந்தரின் கருணையும் எனக்குக் கிட்டும்.
(5) அன்புள்ள ஸ்வரூப தாமோதரர், ஸநாதனர், ரூபர், ரகுநாத தாஸர், ரகுநாத பட்டர், கோபால பட்டர், ஜீவர் மற்றும் லோகநாதரே, என் மீது கருணை கொள்வீராக.
(6) ஆச்சாரியரான ஶ்ரீநிவாஸரே, என் மீது கருணை கொள்ளும். இந்த நரோத்தம தாஸன் இராமசந்திரரின் உறவை வேண்டுகிறான்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆