யசோமதி நந்தன ப்ரஜ-பரோ-நாகர
ஶ்ரீ நாம கீர்த்தனம்
🔆🔆🔆🔆
யசோமதி நந்தன ப்ரஜ-பரோ-நாகர
கோகுல-ரஞ்சன கான
கோபி-பராண-தன மதன-மனோஹர
காலிய-தமன-விதான
அமல ஹரிநாம் அமிய-விலாஸா
விபின-புரந்தர நவீன நாகர-போர
வம்ஸீ-வதன ஸுவாஸா
ப்ரஜ-ஜன-பாலன அஸுர-குல-நாஸன
நந்த-கோதன-ராகோவாலா
கோவிந்த மாதவ நவநீத-தஸ்கர
ஸுந்தர நந்த-கோபால
யாமுநா-தடசரா கோபி-வஸனஹரா
ராஸ-ரஸிக க்ருபாமோய
ஶ்ரீ-ராதா-வல்லப வ்ருந்தாவன-நடபர
பகதி-வினோதாஶ்ரய
பாடலின் பொருள்
(1) பகவான் க்ருஷ்ணர் யசோதையின் அருமைப்புதல்வர்; விரஜவாசிகளின் உன்னத திவ்ய காதலன்; கோகுலத்தின் ஒளிவிளக்கு; கோபிகளின் உயிர்ச்செல்வம்; மன்மதனின் மனத்தையும் கவருகின்றவர்; காலியனெனும் பாம்பைத் தண்டித்தவர்.
(2) அப்பழுக்கற்ற தூய பகவான் ஹரியின் புனித நாமங்கள் இனிமை நிறைந்தவை, அமிர்தமயமான லீலைகள் நிறைந்தவை. க்ருஷ்ணர் விரஜ மண்டலத்திலுள்ள பன்னிரு காடுகளின் தலைவன்; எப்போதும் இளமையானவர்; காதலர்களுள் சிறந்தவர்; புல்லாங்குழலை ஊதிக்கொண்டிருப்பவர்; மிக அழகிய ஆடைகளை உடையவர்.
(3) விரஜவாசிகளின் காவலன்; பல்வேறு அசுர குலங்களை அழிப்பவர்; நந்த மஹாராஜாவின் பசுச்செல்வத்தின் பாதுகாவலன்; பசுக்களுக்கும் நிலத்திற்கும் ஆன்மீகப் புலன்களுக்கும் இன்பத்தைக் கொடுப்பவர்; அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மியின் கணவன்; வெண்ணெய்த் திருடன்; நந்தமஹாராஜாவின் அழகிய இடையர் சிறுவன்.
(4) க்ருஷ்ணர் யமுனை ஆற்றின் கரையில் விளையாடித்திரிபவர்; விரஜவாசிகளான இளங்கோபிகள் நீராடிக்கொண்டிருக்கும் போது அவர்களது ஆடைகளைக் கவர்ந்தவர்; ராஸ நடனத்தின் சுவையை அனுபவிப்பவர். அவர் மிகக் கருணை நிறைந்தவர்; ஶ்ரீமதி ராதாராணியின் அன்பிற்குரிய காதலன்; வ்ருந்தாவனத்தில் சிறப்பாக நடனம் ஆடுபவர்; பக்திவினோத தாகூரின் புகலிடமாக விளங்குபவர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆