பதம் 1
ஈஸ்வர: பரம: க்ருஷ்ண: ஸச்சிதானந்த விக்ரஹ:
அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வகாரண காரணம்
மொழிபெயர்ப்பு
கோவிந்தன் எனப்படும் க்ருஷ்ணர் முழுமுதற்கடவுள். அவரது சரீரம் நித்ய ஆனந்தமயமானது. அவர் ஆதியற்றவர். பல காரணங்களுக்கும் அவரே காரணமானவர்.
பதம் 29
சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்பவ்ருக்ஷ
லக்ஷாவ்ருதேஷு ஸுரபிர் அபிபாலயந்தம்
லக்ஷ்மி-ஸஹஸ்ர-சத-ஸம்ப்ரம-ஸேவ்யமானம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
நான் கோவிந்தனை வழிபடுகிறேன். அவர் ஆதிபுருஷன். முதல் புருஷனான அவர் பசுக்களை மேய்ப்பவர். இந்த இடம் ஆன்மீக விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டது. சுற்றிலும் லக்ஷக்கணக்கான கேட்டவரமளிக்கும் கல்பதருக்கள். இந்த ஆதி புருஷனுக்கு ஆயிரமாயிரம் லக்ஷ்மிகள் அல்லது கோபியர் சேவை புரிகின்றனர்.
பதம் 30
வேணும் க்வனந்தம் அரவிந்த-தலாயதாக்ஷம்
பர்ஹாவதம் அஸிதாம்புத ஸுந்தராங்கம்
கந்தர்ப-கோடி-கமனீய-விசேஷ-சோபம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். புல்லாங்குழல் இசைப்பதில் அவர் தன்னிகரற்றவர். அவரது மொட்டு விரிந்தது போன்ற மலர்க்கண்கள், தலையில் மயிற்பீலி. அவரது கொள்ளை கொள்ளும் அழகு நீல மேகங்கள் போன்றது. அவரது ஒப்பற்ற எழில் உருவம் லக்ஷக்கணக்கான கோபியரை வசீகரிக்கக்கூடியது.
பதம் 31
ஆலோல-சந்த்ரக-லஸத்-வனமால்ய வம்சீ-
ரத்னாங்கதம் ப்ரணய-கேலி-கலா-விலாஸம்
ஷ்யாமம் த்ரி-பங்க-லலிதம் நியத-ப்ரகாசம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அவரது கழுத்தில் சந்திர உருவம் பதித்த தொங்கட்டான், பூமாலை, அவரது இரு கரங்களும் முரளியும் அணிகலன்களும் தரித்துள்ளன. அவர் எப்பொழுதும் இன்ப லீலைகளில் ஆழ்ந்திருப்பவர். அவரது சியாமசுந்தர மூன்று வளையும் தோற்றம் எப்பொழுதும் வெளியில் தெரிகின்றது.
பதம் 32
அங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருத்தி
மந்தி பஷ்யந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்தி
ஆனந்த-சின்மய-ஸத்-உஜ்வல-விக்ரஹஸ்ய
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
யாருடைய உருவம் ஆனந்தம் உண்மை முழுமை நிரம்பியதோ (கண்ணைக் கூசும் பிரகாசமானது), அத்தகைய முழுமுதற்கடவுளை நான் வணங்குகிறேன். அந்த ஆன்மீக உருவத்தில் ஒவ்வொரு அவயவமும் எல்லா அவயவங்களின் வேலைத்திறனையும் கொண்டது. அத்தகைய முழுமுதற்கடவுள் என்றென்றும் பார்த்து பரிபாலித்து ஆன்மீக மற்றும் ஜட புவனங்களை இயக்கிவருகிறார்.
பதம் 33
அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம்
ஆத்யம் புராண-புருஷம் நவ-யௌவனம் ச
வேதேஷு துர்லபம் அதுர்லபம் ஆத்ம-பக்தௌ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
வேதங்களாலும் அடையமுடியாத, ஆனால் ஆத்மார்த்த பக்தியினால் மட்டுமே அடையக்கூடிய அந்த உன்னத புருஷனை, புருஷோத்தமனை வணங்குகிறேன். அவர் ஈடு இணையற்றவர், அழிவற்றவர், ஆதி இல்லாதவர், முடிவற்ற வடிவம் கொண்டவர். அவரே முதலும் நிரந்தரமுமான புருஷன். இப்படி அன்றும் இன்றும் என்றென்றும் இருப்பவர்; இளமை ததும்பும் வாலிபன்.
பதம் 34
பந்தாஸ் து கோடி-சத-வத்ஸர-ஸம்ப்ரம்யோ
வாயோர் அதாபி மனஸோ முனி-புங்கவானாம்
ஸோபி அஸ்தி யத் ப்ரபத-ஸீம்னீ அவிசிந்த்ய
தத்த்வே கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். எண்ணற்ற யோகிகள் அவரது தாமரைத் திருவடியின் கால் கட்டை விரலின் ஒரு விளிம்பையே காண்கின்றனர். இவர்கள் ஆன்மீக விருப்பத்தினால் உந்தப்பட்டு மூச்சுக்கட்டுப்பாடான ப்ராணாயாமத்தை மேற்கொள்கிறார்கள். இதே கால்கட்டை விரல் விளிம்பை கண்ணோக்கும் ஞானிகள் கூட உருவற்ற பிரம்மத்தை ஆண்டாண்டு காலமாய்த் தேடிக் கொண்டேயிருக்கிறவர்கள்; பலவற்றை தவிர்த்த பிறகே பரமனைக் காண்பவர்கள்.
பதம் 35
ஏகோபி அஸௌ ரசயிதும் ஜகத்-அண்ட-கோடிம்
யச்-சக்திர் அஸ்தி ஜகத்-அண்ட சயா யத் அந்த:
அண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
அவர் ஓர் பாகுபாடற்ற வஸ்து. ஏனென்றால் சக்திக்கும் அதனை உடையவருக்கும் இடையில் பாகுபாடில்லை. கோடானுகோடி உலகங்களைப் படைக்கும் அவர் தொழிலில் அவரது சக்தி அவரிடமிருந்து பிரிவதில்லை. எல்லா பிரபஞ்சங்களும் அவரிடத்தில் உள்ளன, அவர் ஒவ்வொரு அணுவிலும் முழுமையாக உள்ளார். இந்த அணுக்கள் ஒரே சமயத்தில் பிரபஞ்சம் முழுவதிலும் சிதறிக்கிடக்கின்றன. இத்தகைய ஆதி கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 36
யத்-பாவ-பாவிதா-தியோ மனுஜாஸ் ததைவ
ஸம்ப்ராப்ய ரூப-மஹிமாஸன-யான-பூஷா:
ஸுக்தைர் யமேவ நிகம-ப்ரதிதை: ஸ்துவந்தி
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான அதே கோவிந்தனை வணங்குகிறேன். பக்தி சொரிந்த மாந்தர்கள் இந்த ஆதி புருஷனை துதிபாடுகின்றனர்; வேதங்கள் வழங்கும் மந்த்ர ஸுக்தத்தை ஓதுகின்றனர். இப்படியாக அவர்கள் தகுந்த அழகு, பெருமை, சிங்காதனங்கள், ஊர்திகள், அணிகலன்கள் முதலானவற்றைப் பெறுகின்றனர்.
பதம் 37
ஆனந்த-சின்மய-ரஸ-ப்ரதிபாவிதாபிஸ்
தாபிர் ய ஏவ நிஜ-ரூபதயா கலாபி:
கோலோக ஏவ நிவஸதி அகிலாத்ம-பூதோ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
கோலோகத்தில் ராதையுடன் வசிக்கும் ஆதிபுருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். ராதை அவரது சொந்த ஆன்மீக சாயல் கொண்டவள். பரமபுருஷன் ஆயக்கலைகள் 64-னையும் நேயக் கற்றவர். ராதையின் தோழிகளுடன் கூடிய கூட்டத்தில் கோவிந்தன் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பவர். ராதையின் சகிகள் அவளது விரிவுகள். ஒவ்வொரு கோபியரிடமும் ராதையின் நிரந்தர ஆனந்த ஆன்மீக ரஸம் பட்டு பரவியிருக்கிறது.
பதம் 38
ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன
ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி
யம் ஷ்யாமசுந்தரம் அசிந்த்ய-குண-ஸ்வரூபம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
கண்ணனேயான ஷ்யாமசுந்தரனை, கோவிந்தனை, ஆதிபுருஷனை வணங்குகிறேன். அவர் எண்ணமுடியாத குணாதிசயங்கள் கொண்டவர். அவரை தூய பக்தர்கள் தங்கள் இதயத்தின் இதயத்தில் வைத்து, அஞ்சனம் தீட்டியது போல அன்பு தீட்டிய விழிகளால் காண்கின்றனர்.
பதம் 39
ராமாதி-மூர்த்திஷு கலா-நியமேன திஷ்டன்
நானாவதாரம் அகரோத் புவனேஷு கிந்து
க்ருஷ்ண: ஸ்வயம் ஸம்பவத் பரம: புமான் யோ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
எந்த ஆதி புருஷன் கோவிந்தன் ராமன், நரஸிம்ஹன், வாமனன் போன்ற அவதாரங்கள் எடுத்தவனோ, அவரையே நான் வணங்குகிறேன்.
பதம் 40
யஸ்ய ப்ரபா-ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி-
கோடீஷ்வ அசேஷ-வஸுதாதி-விபூதி-பின்னம்
தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அசேஷ-பூதம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
உபநிஷதங்கள் எதை பிரம்மம் என்று வர்ணிக்கின்றதோ, அதன் தோற்றுவாய் சுயம்பிரகாசமான ஆதிபுருஷன் கோவிந்தன். இந்த கோவிந்தன் வகுபடாத, வரம்பற்ற, எல்லையற்ற ஸத்யன். இவரை நான் வணங்குகிறேன்.
பதம் 41
மாயா ஹி யஸ்ய ஜகத்-அண்ட-சதானி ஸூதே
த்ரைகுண்ய-தத்-விஷய-வேத-விதாயமானா
ஸத்வாவலம்பி-பர-ஸத்வ-விசுத்த-ஸத்வம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
அனைத்து இருப்பிற்கும் ஆதாரமான, இறுதி உண்மையான மெய்பொருளான புருஷனான கோவிந்தனை வணங்குகிறேன். அவரது புறச்சக்தி ஸத்வ, ரஜ, தம குணங்களைத் தழுவியது; ஜட உலகம் பற்றிய வேத அறிவை பரப்பச்செய்வது.
பதம் 42
ஆனந்த-சின்மய-ரஸாத்மதயா மன:ஸு
ய: ப்ராணினாம் ப்ரதிபலன் ஸ்மரதாம் உபேத்ய
லீலாயிதேன புவனானி ஜயதி அஜஸ்ரம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அவரது புகழ் ஜட உலகில் ஆட்சி செலுத்துகின்றது. அவரது திருவிளையாடல்கள் அகிலம் பரந்தவை. ஸச்சிதானந்த சொரூபமாய் அவரது மாட்சிமை அகிலத்தில் நிலவுகின்றது.
பதம் 43
கோலோக-நாம்னி நிஜ-தாம்னி தலேச தஸ்ய
தேவி-மஹேச-ஹரி-தாமஸு தேஷு தேஷு
தே தே ப்ரபாவ-நிசயா விஹிதாஸ் ச யேன
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
தேவிதாமம் என்ற இருப்பிடம் அனைத்து உலகங்களிலும் மிகமிகத் தாழ்மையான உலகம். அதற்கு சற்று மேலாக மஹேச தாமம் என்ற சிவலோகம்; அதற்கு மேலாக ஹரிதாமம் என்ற வைகுந்தலோகம்; எல்லாவற்றுக்கும் சிகரமாய் கோலோகம், அது பகவான் க்ருஷ்ணரின் வசிப்பிடம். படிப்படியான உலகங்களை உரிய ஆளுநர்களுக்கு வழங்கிய ஆதிபுருஷனான கேசவனை நான் வணங்குகிறேன்.
பதம் 44
ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரளய-ஸாதன-சக்திர் ஏகா
சாயேவ யஸ்ய புவனானி பிபர்தி துர்கா
இச்சானுரூபம் அபி யஸ்ய ச சேஷ்டதே ஸா
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
சித் சக்தியின் நிழலான மாயா (புறசக்தி) மக்களால் துர்காதேவியாக வழிபடப்படுகிறாள். அவளே இந்த ஜகத்தைப் படைத்து, காத்து, அழிப்பவள். யாருடைய சித்தப்படி துர்காதேவி நடந்துகொள்கிறாளோ, அந்த ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 45
க்ஷிரம் யதா ததி விகார-விசேஷ-யோகாத்
ஸஞ்ஜாயதே ந ஹி தத: ப்ருதக்-அஸ்தி ஹேதோ:
ய: சம்புதாம் அபி ததா ஸமுபைதி கார்யாத்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
அமிலங்களால் பால் தயிராகத் திரிகிறது. இருப்பினும் இந்த தயிர் பாலும் அல்ல, பாலிலிருந்து தன்மையில் மாறுபட்டதுமல்ல. அதே போன்ற ஆதி ஆண்மகனாகிய கோவிந்தனை நான் வணங்குகிறேன். இந்த ஆதி புருஷனிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக சிவபெருமான் அந்த நிலையை அடைகிறார். அவர் அழிக்கும் தொழிலின் அதிபதி.
பதம் 46
தீபார்சீர் ஏவ ஹி தசாந்தரம் அப்யுபேத்ய
தீபாயதே விவ்ருத-ஹேது-ஸமான-தர்மா
யஸ் தாத்ருக் ஏவ ஹி ச விஷ்ணுதயா விபாதி
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஒரு தீபம் மற்றொரு தீபத்தை ஏற்றினாலும் தன்னொளி குறைவதில்லை. அதேபோல தன்னை பல விதங்களில் விஷ்ணுவாகத் தோன்றச் செய்யும் பிரபு கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 47
ய: காரணார்ணவ-ஜலே பஜதி ஸ்ம யோக-
நித்ராம் அனந்த-ஜகத்-அண்ட-ஸ-ரோம-கூப:
ஆதார-சக்திம் அவலம்ப்ய பராம் ஸ்வ-மூர்த்திம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதிபுருஷன் கோவிந்தனின் ஓர் அம்சமான மஹாவிஷ்ணு, காரணக்கடலில் தனது பரம ஆதார சக்தியை அவலம்பித்து யோகநித்ரை புரிகிறார். அவரது உடலின் நுண்துளைகளில் இந்த அனந்த பிரபஞ்சங்களே அடங்கியிருக்கின்றன. அத்தகைய கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 48
யஸ்யைக-நிச்வஸித-காலம் அதாவலம்ப்ய
ஜீவந்தி லோம-வில-ஜா ஜகத்-அண்ட-நாதா:
விஷ்ணுர் மஹான் ஸ இஹ யஸ்ய கலா-விசேஷோ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
பிரம்மனும் இதர ஜட உலக அதிகாரிகளும் (பிரபஞ்ச நாதர்களும்) மஹாவிஷ்ணுவின் உடலின் நுண்துளைகளிலிருந்து தோன்றியவர்கள். மஹாவிஷ்ணு ஒரு முறை மூச்சை வெளிவிட்டு உள்ளிழுக்கும் காலம் வரையிலேயே இவர்கள் உயிருடன் இருப்பார்கள். யாரின் ஒரு பகுதி மஹாவிஷ்ணுவோ, அன்னவரை நான் வணங்குகிறேன். அவரே ஆதிபுருஷரான கோவிந்தன்.
பதம் 49
பாஸ்வான் யதாச்ம-சகலேஷு நிஜேஷு தேஜ:
ஸ்வீயம் கியத் ப்ரகதயதி அபி தத்வத் அத்ர
பிரம்மா ய ஏஷ ஜகத்-அண்ட-விதான-கர்தா
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதிபுருஷரான கோவிந்தனிடமிருந்து பிரபஞ்சப் படைப்பிற்காக அதிகாரம் பெற்றவர் பிரம்மா. இந்த அண்டங்களை உருவாக்குவதற்கான அதிகாரத்தை அவர் கோவிந்தனிடமிருந்தே பெறுகிறார். தன் பெயரையே கொண்ட சூர்யகாந்தக் கற்கள் மேல் சூரிய ஒளி பட்டு பிரகாசிப்பதைப் போன்றது இது. அத்தகைய முழுமுதற்கடவுளான கோவிந்தனை வணங்குகிறேன்.
பதம் 50
யத்-பாத-பல்லவ-யுகம் வினிதாய கும்ப-
த்வந்த்வே ப்ரணாம-ஸமயே ஸ கணாதிராஜ:
விக்னான் விஹந்தும் அலம் அஸ்ய ஜகத்-த்ரயஸ்ய
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதிபுருஷனான கோவிந்தனின் தளிர் போன்ற தாமரைத் திருவடிகளை கணேசன் தனது தலைக் கும்பங்களின் (யானை மஸ்தகத்தின்) மீது வணங்கும் போது தாங்குகிறார். மூவுலகங்களிலும் முன்னேற்றப்பாதையில் தென்படும் தடைகளை நீக்குவதற்கான சக்தியையும் அதிகாரத்தையும் பெறுவதற்காக அவர் இதனைச் செய்கிறார். அத்தகைய கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 51
அக்னிர் மஹி ககனம் அம்பு மருத்திசஸ் ச
காலஸ் ததாத்ம-மனஸீதி ஜகத்-த்ரயாணி
யஸ்மாத் பவந்தி விபவந்தி விசந்தி யம் ச
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
நெருப்பு, மண், ஆகாயம், தண்ணீர், காற்று, திசை, காலம், ஆத்மா, மனது என்ற ஒன்பது மூலகங்களால் மூவுலகும் நிறைந்துள்ளது. யாரிடமிருந்து இவை தோன்றுகின்றனவோ, யாரிடம் இவை நிலைபெற்று இருக்கின்றனவோ, ஊழி நாசத்தின் போது யாரிடம் இவை மீண்டும் அடைக்கலம் புகுகின்றனவோ, அந்த கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 52
யச்-சக்ஷுர் ஏஷ ஸவிதா ஸகல-க்ரஹாணாம்
ராஜா ஸமஸ்த-ஸுரமூர்த்திர் அசேஷ-தேஜா:
யஸ்யாஜ்ஞயா ப்ரமதி ஸம்ப்ருத-கால-சக்ரோ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
எல்லா கிரகங்களின் அரசனான சூரியன் அளப்பரிய ஒளியைக் கொண்டவன்; தேவர்களின் வடிவமாகவும் விளங்குபவன்; இவ்வுலகின் கண் போன்றவன். அத்தகைய சூரியன் தனக்குரிய காலசக்ரத்தில் ஏறி, யாருடைய ஆணைப்படி பிரபஞ்சத்தை வலம் வருகிறானோ, அந்த ஆதிபுருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 53
தர்மோத பாப-நிசயா: ஸ்ருதயஸ் தபாம்ஸி
பிரம்மாதி-கீட-பதகாவதயஸ் ச ஜீவா:
யத்-தத்த-மாத்ர-விபவ-ப்ரகட-ப்ரபாவா
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
நான் ஆதிபுருஷனான கோவிந்தனை வழிபடுகிறேன். அறநெறி (தர்மம்), பாவ புண்ணியங்கள், வேதங்கள், தவங்கள் மற்றும் பிரம்மா முதல் அற்பப் பூச்சி வரை உள்ள அனைத்து ஜீவன்களும், கோவிந்தன் வழங்கிய அந்தந்த அதிகாரங்களின்படியே தங்களின் மகிமைகளை வெளிப்படுத்துகின்றன.
பதம் 54
யஸ் த்வ இந்த்ர-கோபமதவேந்த்ரமஹோ ஸ்வ-கர்மா
பந்தானுரூப-பல-பாஜனம் ஆதனோதி
கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
கோவிந்தன் தூய பக்தர்களின் கர்ம வினைகளை வேரோடு சுட்டெரித்து அழிக்கிறார். மற்றபடி, ஜட உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு அவர் செய்கிறார். எந்தெந்த நிலையில் மக்கள் இருந்தாலும், அவர்களின் முன்வினைகளின் பலனை அது இன்பமானாலும் துன்பமானாலும் அனுபவிக்கச் செய்கிறார். ‘இந்திரகோபம்’ என்ற அற்பப் பூச்சியானாலும் சரி, தேவேந்திரனேயானாலும் சரி, அவரின் இந்த கர்ம விதியை மீற முடியாது.
பதம் 55
யம் க்ரோத-காம-ஸஹஜ-ப்ரணயாதி-பீதி-
வாத்ஸல்ய-மோஹ-குரு-கௌரவ-சேவ்ய-பாவை:
ஸஞ்சிந்த்ய தஸ்ய ஸத்ருஷீம் தனும் ஆபுர் ஏதே
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
சினம், காம இச்சை, இயல்பான நட்பு, அன்பு, பயம், பெற்றோர் வாஞ்சை, மோகம், மரியாதை கலந்த சேவை போன்ற பல்வேறு மனநிலைகளில் கோவிந்தனை தியானிப்பவர்கள், தங்கள் தியான நிலைக்கேற்ற ஆன்மீகத் திருமேனியைப் பெறுகின்றனர். அப்படிப்பட்ட கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 56
ஸ்ரிய: காந்தா: காந்த: பரம-புருஷ: கல்ப-தரவோ
த்ருமா பூமிஸ் சிந்தாமணி-கண-மயி தோயம் அம்ருதம்
கதா கானம் நாட்டியம் கமனம் அபி வம்சீ ப்ரிய-ஸகி
சித்-ஆனந்தம் ஜ்யோதி: பரம் அபி தத் ஆஸ்வாத்யம் அபி ச
ஸ யத்ர க்ஷீராப்தி: ஸ்ரவதி ஸுரபிப்யஸ்ச ஸு மஹான்
நிமேஷார்தாக்யோ வா வ்ரஜதி ந ஹி யத்ராபி ஸமய:
பஜே ஸ்வேதத்வீபம் தமஹமிஹ கோலோகம் இதி யம்
விதந்தஸ்தே ஸந்த: க்ஷிதி-விரல-சாரா: கதிபயே
மொழிபெயர்ப்பு
ஸ்வேதத்வீபம் எனப்படும் அந்த தெய்வீக இருப்பிடத்தை நான் வணங்குகிறேன். அங்கே பகவானின் அன்புப் பத்தினியரான லக்ஷ்மிகள் (கோபியர்கள்) வீற்றுள்ளனர்; அவர்கள் கலப்படமற்ற ஆன்மீகச் சொரூபங்கள். அவர்கள் க்ருஷ்ணரையே தங்களின் காதலனாக எண்ணி வழிபடுபவர்கள். இங்குள்ள ஒவ்வொரு மரமும் கேட்டதைத் தரும் கற்பக மரம்; இதன் நிலமோ சிந்தாமணி கற்களால் ஆனது; இங்குள்ள தண்ணீர் எல்லாம் அமுதம்; ஒவ்வொரு வார்த்தையும் பாடல்; ஒவ்வொரு நடையும் நாட்டியம்; இங்குப் புல்லாங்குழலே பிரியமான தோழன். இங்கு வீசும் ஒளி பேரானந்தமயமானது. இங்குள்ள ஆன்மீகப் பொருள்கள் யாவும் அனுபவிக்கத் தகுந்த பேரானந்தச் சுவை நிரம்பியவை. இங்கு வாழும் காமதேனுப் பசுக்கள் பாற்கடலாகப் பாலைச் சொரிகின்றன. இங்கு காலம் அரை நொடி கூடக் கழிந்து போவதில்லை; அதனால் கடந்த காலமோ, எதிர்காலமோ இல்லை. அந்த உலகமே கோலோகம். பூமியில் வாழும் சில தன்னையறிந்த மகாத்மாக்களே இந்த ஆன்மீக உலகினைப் பற்றி அறிகின்றனர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆