ஶ்ரீ குரு-வந்தனம்
ஶ்ரீ குருவின் வழிபாடு
(பாடல் தொகுப்பு: ப்ரேம-பக்தி-சந்த்ரிகா)
(1)
ஶ்ரீ-குரு-சரண-பத்ம, கேவல-பக்தி-ஸத்ம,
வந்தோ முஞி ஸாவதான மதே
ஜஹார ப்ரஸாதே பாஇ, ஏ பவ தரியா ஜாஇ,
க்ருஷ்ண-ப்ராப்தி ஹய ஜாஹா ஹதே
(2)
குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கரியா ஐக்ய,
ஆர நா கரிஹ மனே ஆஷா,
ஶ்ரீ-குரு-சரணே ரதி, ஏஇ ஸே உத்தம-கதி,
ஜே ப்ரஸாதே பூரே ஸர்வ ஆஷா,
(3)
சக்ஷுதான தில ஜேஇ, ஜன்மே ஜன்மே ப்ரபு ஸேஇ,
திவ்ய-ஜ்ஞான ஹ்ருதே ப்ரகாஷித
ப்ரேம-பக்தி ஜாஹா ஹஇதே, அவித்யா வினாஷ ஜாதே,
வேதே காய ஜாஹார சரித
(4)
ஶ்ரீ-குரு கருணா-ஸிந்து, அதம ஜனார பந்து,
லோகநாத லோகேர ஜீவன
ஹா ஹா ப்ரபு கர தயா, தேஹ மோரே பத-சாயா,
ஏபே ஜஷ குஷுக த்ரிபுவன
பாடலின் பொருள்
(1) ஶ்ரீ குருவின் தாமரைத் திருவடிகள் மட்டுமே தூய பக்தித் தொண்டினை அடைவதற்கான வழியாகும். அந்தத் தாமரைத் திருவடிகளுக்கு நான் மிகுந்த கவனத்துடனும் மரியாதையுடனும் தண்டம் சமர்ப்பிக்கின்றேன். சகோதரர்களே! அவரது கருணையினால் இந்த பௌதிக வாழ்வெனும் கடலைக் கடந்து கிருஷ்ணரின் கருணையை அடைய முடியும்.
(2) குருவின் தாமரைத் திருவாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் எனது சித்தத்துடன் (உணர்வுடன்) ஐக்கியமாக்கியுள்ளேன். அந்த வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் நான் விரும்புவதில்லை. ஶ்ரீ குருவின் தாமரைத் திருவடிகளின் மீதான பற்றுதல் உத்தம கதியை வழங்கும். அந்த கருணையினால் எல்லா ஆசைகளும் பூர்த்தியடைகின்றன.
(3) எனது இருண்ட கண்களைத் திறந்து தெய்வீகப் பார்வை என்னும் தானத்தை வழங்கிய ஆன்மீக குரு பிறவிதோறும் எனது பிரபுவாவார். அவர் தெய்வீக ஞானத்தை எனது இதயத்தில் வெளிப்படுத்துகிறார். அவரிடமிருந்தே பிரேம பக்தி வெளிப்படுகிறது; அவராலேயே அறியாமை அகற்றப்படுகிறது. அவரது குணங்களை வேத சாஸ்திரங்கள் பாடுகின்றன.
(4) எங்களின் ஆன்மீக குரு கருணையின் கடலாவார்; வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களின் நண்பராவார். எல்லா பக்தர்களின் எஜமானராகவும் உயிராகவும் திகழ்கிறார். அன்புள்ள பிரபுவே! என் மீது கருணை கொள்ளுங்கள்; தங்களது தாமரைத் திருவடியின் நிழலில் இடம் கொடுங்கள். உங்களது புகழ் மூவுலகமும் பரவட்டும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆