ஶ்ரீ நரசிம்ம ப்ரணாமம்
நமஸ்தே நரஸிம்ஹாய
ப்ரஹ்லாத-ஆஹ்லாத-தாயினே
ஹிரண்யகஶிபூர்-வக்ஷ:
ஶிலா-டங்க-நகாலயே
இதோ நரஸிம்ஹ: பரதோ நரஸிம்ஹ:
யதோ யதோ யாமி ததோ நரஸிம்ஹ:
பஹிர் நரஸிம்ஹோ ஹ்ருதயே நரஸிம்ஹ:
நரஸிம்ஹம் ஆதிம் ஶரணம் ப்ரபத்யே
நரசிம்ம ஸ்துதி (தஸாவதார ஸ்தோத்திரத்திலிருந்து)
தவகர-கமல-வரே நகம் அத்புத-ஸ்ருங்கம்
தலித-ஹிரண்யகசிபு-தனு-ப்ருங்கம்
கேசவ த்ருத-நரஹரி-ரூபா ஜய ஜகதீச ஹரே
மொழிபெயர்ப்பு
ஹிரண்யகசிபுவின் பாறை போன்ற மார்பினைத் தன் கூரிய உளி போன்ற நகங்களால் கிழித்தெறிந்தவரும், பிரஹலாதனின் ஆனந்தத்திற்குக் காரணமானவருமான பகவான் ஶ்ரீநரசிம்மரை நான் வணங்குகின்றேன்.
பகவான் நரசிம்மர் இங்கும், அங்கும் செல்லும் இடமெல்லாம் இருக்கிறார், அகத்திலும் புறத்திலும் கூட இருக்கிறார், காரணங்களுக்கெல்லாம் காரணமான பகவான் நரசிம்மரை நான் தஞ்சமடைகிறேன்.
ஓ கேசவா, பிரபஞ்சத்தின் பிரபுவே, ஓ ஹரியே! பாதி மனிதனும் பாதி சிங்கமுமான உருவத்தை ஏற்ற உமக்கு எல்லாப் புகழும் உரித்தாகுக! ஒருவன் தனது விரல் நகங்களுக்கிடையே சிறு பூச்சியை நசுக்குவது போல, அசுரன் ஹிரண்யகசிபுவின் உடலை உமது அழகிய விரல் நகங்களால் கிழித்தெறிந்து விட்டீர்கள்.
ஜய நரசிம்ஹா ஶ்ரீ நரசிம்ஹா
(வியாசதேவர்) பிரம்மாண்ட புராணம்
ஜய நரசிம்ஹா ஶ்ரீ நரசிம்ஹா
ஜய ஜய நரசிம்ஹதேவ
ப்ரலதேச ஜய பத்ம
முக பத்ம ப்ருங்க
விளக்கம்:
எல்லாப் புகழும் பகவான் நரசிம்மருக்கே, எல்லாப் புகழும் பகவான் நரசிம்மருக்கே! பிரகலாத மஹாராஜரின் பிரபுவாக, தேன்வண்டைப் போல, எப்பொழுதும் மஹாலக்ஷ்மி தாயாரின் தாமரை முகத்தைப் பார்ப்பதில் ஈடுபட்டுள்ளார்.
உக்ர வீரம் மஹாவிஷ்ணு (ந்ருசிம்ஹ கவச பீஜ மந்திரம்)
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணு
ஜ்வலந்தம் சர்வதோ முகம்
ந்ருசிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யூர் ம்ருத்யும் நமாம்யஹம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆