ஶ்ரீ ஶ்ரீ குரு அஷ்டகம்
(ஶ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர்)
பதம் 1
ஸம்சார-தாவாநல-லீட-லோகா
த்ராணாய காருண்ய-கனாகனத்வம்
ப்ராப்தஸ்ய கல்யாண-குணார்ணவஸ்ய
வந்தே குரோ ஶ்ரீ-சரணாரவிந்தம்
மொழிபெயர்ப்பு
மேகங்கள் எவ்வாறு மழையைப் பொழிந்து காட்டுத்தீயை அணைக்கின்றதோ, அவ்வாறே கருணைக்கடலாகிய ஆன்மீக குருவானவர் பௌதிக விவகாரங்களினால் தகிக்கப்படும் இவ்வுலகைக் காப்பாற்றுகிறார். மங்களகரமான குணங்களை உடைய அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
பதம் 2
மஹாப்ராபோ கீர்தன-ந்ருத்ய-கீதா
வாதித்ர-மாத்யன்-மனஸோ ரஸேனா
ரோமாஞ்ச-கம்பா ஶ்ருதரங்க-பாஜோ
வந்தே குரோ ஶ்ரீ-சரணாரவிந்தம்
மொழிபெயர்ப்பு
ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன இயக்கத்தில் புனித நாமத்தை ஜெபித்து, நடனமாடி, பாடி, இசைக்கருவிகளை இசைத்து ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் ஆனந்தமடைகிறார். சில நேரங்களில் மயிர் கூச்செரிந்து, உடல் நடுங்க, கண்களில் நீர் மல்கத் தனது தூய பக்தியை வெளிப்படுத்துகிறார். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
பதம் 3
ஶ்ரீ-விக்ரஹாராதன-நித்ய-நாநா
ஸ்ருங்கார-தன்-மந்திர-மார்ஜனாதௌ
யுக்தஸ்ய பக்தாம்ஶ் ச நியுஞ்ஜதோ பி
வந்தே குரோ ஶ்ரீ-சரணாரவிந்தம்
மொழிபெயர்ப்பு
ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் கோவிலில் ஶ்ரீராதா க்ருஷ்ணரை வழிபட்டு, தனது சிஷ்யர்களையும் இந்த வழிபாட்டில் ஈடுபடுத்துகிறார். அவர்கள் அழகிய ஆடை, நகைகளால் தெய்வங்களை அலங்கரித்து, கோவிலைச் சுத்தம் செய்து சேவை புரிகிறார்கள். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
பதம் 4
சதுர்-வித-ஶ்ரீ-பகவத்-ப்ரசாதோ
ஸ்வாத்வ்-அன்ன-த்ருப்தான்-ஹரி-பக்த-சங்கான்
க்ருத்வைவ த்ருப்திம் பஜத சதைவா
வந்தே குரோ ஶ்ரீ-சரணாரவிந்தம்
மொழிபெயர்ப்பு
நான்கு வகையான அறுசுவை உணவுகளைக் க்ருஷ்ணருக்குப் படைத்து, அந்த பகவத் பிரசாதத்தைச் சாப்பிடும் பக்தர்களைக் கண்டு தான் திருப்தியடைகிறார். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
பதம் 5
ஶ்ரீ-ராதிகா-மாதவயோர் அபாரா
மாதுர்ய-லீலா-குண-ரூப-நாம்நாம்
ப்ரதி-க்ஷணாஸ்வாதன-லோலுபஸ்ய
வந்தே குரோ ஶ்ரீ-சரணாரவிந்தம்
மொழிபெயர்ப்பு
ஶ்ரீராதா மாதவரின் எல்லையற்ற மாதுர்ய லீலைகளைக் கேட்டும், நினைத்தும் அவர்களின் நாம, ரூபங்களில் ஆர்வம் கொண்டு, எந்த நொடியிலும் இவைகளை வெளியிடப் பேராவல் மிக்கவராய் இருக்கிறார் ஆன்மீக குருவானவர். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
பதம் 6
நிகுஞ்ச-யூனோ ரதி-கேலி-சித்யை
யா-யாலிபிர் யுக்திர் அபேக்ஷணீயா
தத்ராதி-தாக்ஷ்யாத் அதி-வல்லபஸ்ய
வந்தே குரோ ஶ்ரீ-சரணாரவிந்தம்
மொழிபெயர்ப்பு
விருந்தாவனத்தில் ஶ்ரீராதா க்ருஷ்ணரின் மாதுர்ய லீலைகளுக்கு வெவ்வேறு வகையான ஏற்பாடுகளைச் செய்யும் கோபிகளுக்குப் பொருத்தமான, சிறந்த ஏற்பாடுகளைச் செய்வதில் அனுபவமிக்கவரான ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
பதம் 7
ஸாக்ஷாத்-ஹரித்வேன சமஸ்த-சாஸ்த்ரைர்
யுக்தஸ் ததா பாவ்யத ஏவ ஸத்பி:
கிந்து ப்ரபோர் ய ப்ரிய ஏவ தஸ்ய
வந்தே குரோ ஶ்ரீ-சரணாரவிந்தம்
மொழிபெயர்ப்பு
குரு என்பவர் உண்மையில் பகவத் ஸ்வரூபமாக ஆராதிக்கப்பட வேண்டியவர். ஏனென்றால் அவர் பகவானுடைய அந்தரங்க தாஸன் என்பதை சாஸ்திரங்களும், எல்லா ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக்கொள்கிறார்கள். அப்பேர்ப்பட்ட ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
பதம் 8
யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ
யஸ்ய அப்ரசாதான் ந கதி குதோ பி:
த்யாயன் ஸ்துவன்ஸ் தஸ்ய யஶஸ் த்ரி-ஸந்த்யம்
வந்தே குரோ ஶ்ரீ-சரணாரவிந்தம்
மொழிபெயர்ப்பு
குருவின் கிருபை இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. ஆகவே குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று முறையாவது குருவை நினைத்து அவரைப் போற்ற வேண்டும். எனது ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆