ஒரு ராஜாவிடம் பல யானைகள் இருந்தன. அவற்றுள் ஒரு யானை மிகவும் பலமிக்கதாகவும், கீழ்ப்படிதல் உள்ளதாகவும், விவேகமும் போர் திறனும் கொண்டதாகவும் விளங்கியது. பல போர்களில் களமிறங்கி ராஜாவுக்கு வெற்றியைத் தேடித்தந்ததால், அது ராஜாவிற்கு மிகவும் பிடித்தமான யானையாக மாறியது.
நாட்கள் உருண்டோடின; யானைக்கும் வயதானது. அதனால் முன்புபோல போர்க்களத்தில் செயல்பட முடியவில்லை. “எனவே, ராஜா அதை போருக்கு அனுப்புவதைக் குறைத்துக்கொண்டார். இருப்பினும், அது ராஜாவின் படையில் தொடர்ந்து அங்கமாகவே இருந்தது.”
ஒருநாள், அந்த யானை தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அதன் கால்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன. எவ்வளவு முயன்றும் அதனால் கால்களை வெளியே எடுக்க முடியவில்லை; சேற்றிலும் மூழ்கத் தொடங்கியது. யானையின் பிளிறல் சத்தத்தைக் கேட்டு மக்களும், செய்தி அறிந்து ராஜாவும் ஏரிக்கரையில் கூடினர். யானையை வெளியேற்றப் பல வழிகளில் தீவிர முயற்சி செய்தனர். ஆனால், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
அந்த வழியே வந்த கௌதம புத்தர் இந்தச் சம்பவத்தைக் கண்டார். ஏரியைச் சுற்றிப் ‘போர் முரசுகளை’ முழங்குமாறு ராஜாவுக்கு அவர் யோசனை கூறினார். சேற்றில் சிக்கிய யானைக்கும் போர் முரசிற்கும் என்ன சம்பந்தம் என்று அனைவரும் விசித்திரமாகப் பார்த்தனர்.
இருப்பினும், போர் முரசு முழங்கத் தொடங்கியதும், யானையின் உடல்மொழியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது மெதுவாக நிமிர்ந்து நின்று, தன் முழு பலத்தையும் திரட்டிச் சேற்றிலிருந்து தானாகவே வெளியே வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!
Unnatha ellakku