இந்த விரத காலங்களில் அசைவம் உண்ணக் கூடாது.
ஸ்ரவண மாதத்தில் கீரை உண்ணக் கூடாது.
பாத்ர மாதத்தில் தயிர் உண்ணக் கூடாது.
ஆஸ்வின மாதத்தில் பால் அருந்தக் கூடாது.
கார்த்திக மாதத்தில் மீன் மற்றும் இதர அசைவப் பொருட்களை உண்ணக் கூடாது. அசைவ உணவு என்பது மீன் மற்றும் மாமிசத்தினைக் குறிக்கின்றது. அதுபோலவே, மசூர் பருப்பும் உளுத்தம் பருப்பும் அசைவ உணவாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டு பருப்புகளிலும் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. புரதம் அதிகமாகக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள் அசைவகமாகக் கருதப்படுகின்றன. மொத்தமாகப் பார்த்தால் சாதுர்மாஸ்யத்தின் நான்கு மாத காலத்தின்போது, புலனின்பத்திற்கான எல்லா உணவையும் கைவிடுவதற்குப் பயிற்சி செய்ய வேண்டும்.
(ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்யலீலை 4.169)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆