ஶ்ரீ துளசி ஸ்தோத்திரம்
விருந்தாயை துளசி-தேவ்ய
ப்ரியாயை கேசவஸ்ய ச
க்ருஷ்ண-பக்தி-ப்ரதே தேவி
சத்யவத்யை நமோ நம:
மொழிபெயர்ப்பு
பகவான் கேசவரின் அன்புக்குப் பாத்திரமான ஶ்ரீமதி துளசி தேவிக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்! பகவான் க்ருஷ்ணருக்கு பக்தித் தொண்டை வாரி வழங்கி, மிக உயர்ந்த உண்மையின் உறைவிடமாய் இருக்கிறீர்கள்.
ஶ்ரீ துளசி கீர்த்தனை
பதம் 1
நமோ நம: துளசி க்ருஷ்ண-ப்ரேயஸி
ராதா-க்ருஷ்ண-ஸேவா பாபோ ஏய் அபிலாஷி
பதம் 2
ஜே தோமார சரண லோய் தார வாஞ்சா பூர்ண ஹோய்
க்ருபா கோரி கோரோ தாரே ப்ருந்தாவன-பாஸி
பதம் 3
மோர் ஏய் அபிலாஸ் பிலாஸ் குஞ்சே தியோ வாஸ்
நயனே ஹேரிபோ சதா ஜுகல-ரூப-ராஸி
பதம் 4
ஏ நிவேதன தரோ ஸகீர அனுகத கோரோ
ஸேவா-அதிகார தியே கோரோ நிஜ தாஸி
பதம் 5
தீன க்ருஷ்ண-தாஸே கோய் ஏ ஜென மோர ஹோய்
ஶ்ரீ-ராதா-கோவிந்த-ப்ரேமே ஸதா ஜேன பாஸி
மொழிபெயர்ப்பு
க்ருஷ்ணருக்குப் பிரியமான துளசி தேவியே, மீண்டும் மீண்டும் உங்கள் முன்னால் நான் வணங்குகிறேன். ஶ்ரீராதா க்ருஷ்ணரின் சேவையைப் பெறுவதே எனது விருப்பமாகும்.
உங்களிடம் தஞ்சமடையும் அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்படுகின்றன. உங்களது கருணையை அவர்கள் மேல் பொழிந்து, அவர்களை விருந்தாவன வாசியாக மாற்றுகிறீர்கள்.
இன்பம் கொழிக்கும் விருந்தாவன தாமில் எனக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இவ்வாறு என் மனக்கண்ணில் ராதா க்ருஷ்ணரின் அழகிய லீலைகளை எப்பொழுதும் நான் காண்பேன்.
விருந்தாவனத்தில் பசுக்களை மேய்க்கும் இடைச்சிறுமியரின் (ஸகீரின்) வழிநடத்துதலில் என்னை ஆக்குங்கள். பக்தி சேவையில் எனக்கு அதிகாரம் தந்து, உங்களது சொந்த சேவகியாக என்னை மாற்றுங்கள்.
இந்தத் தாழ்ந்த க்ருஷ்ண சேவகனின் வேண்டுதல் இதுவே ஆகும்; எப்போதும் என்னை ஶ்ரீ ராதா கோவிந்தனுடைய பிரேம சாகரத்தில் நீந்தச் செய்யும்படி உங்களை வேண்டுகிறேன்.
ஶ்ரீ துளசி பிரதக்ஷிண மந்திரம்
யானி கானி ச பாபானி
ப்ரஹ்ம-ஹத்யாதிகானி ச
தானி தானி ப்ரணஸ்யந்தி
ப்ரதக்ஷிண பதே பதே
மொழிபெயர்ப்பு
துளசி தேவியை வலம் வரும் ஒவ்வொரு அடியும் அனைத்து வகையான பாவங்களையும் அழித்து விடுகிறது. பிராமணரைக் கொல்லும் மகாபாவம் உட்பட அனைத்தும் இதில் அடங்கும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆