நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன ஆக்ஞா டஹல்
மஹாபிரபுவின் கட்டளைப்படி நகர் ஸங்கீர்த்தனம் செய்தல்
(கீதாவளியில் பக்திவினோத தாகூர்)
1
நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன
பதியாசே நாம்-ஹட்டா ஜீவேர் காரண
2
(ஶ்ரத்தாவான் ஜன ஹே, ஶ்ரத்தாவான் ஜன ஹே!)
ப்ரபுர் ஆஞ்ஞாய, பாய், மாகி ஏஇ பிக்ஷா
बोलो க்ருஷ்ண, பஜோ க்ருஷ்ண, கோரோ க்ருஷ்ண-ஸிக்ஷா
3
அபராத-ஶூன்ய ஹயே லோஹோ க்ருஷ்ண-நாம்
க்ருஷ்ண மாதா, க்ருஷ்ண பிதா, க்ருஷ்ண தன-ப்ராண்
4
க்ருஷ்ணேர ஸம்ஸார கோரோ சாடி அனாசார்
ஜீவே தோயா, க்ருஷ்ண-நாம், ஸர்வ-தர்ம-ஸார்
பாடலின் பொருள்
(1) நதீயா நகரத்தின் கோத்ருமத்வீபத்தில் கருணையே வடிவான பிரபு நித்யானந்தர், வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காகப் புனித நாமச் சந்தையை (நாம் ஹட்டா) திறந்து வைத்துள்ளார்.
(2) ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! பிரபு கௌராங்கரின் கட்டளைப்படி, ஓ சகோதரர்களே, நான் இந்த பிச்சையை வேண்டி யாசிக்கின்றேன்: “க்ருஷ்ணா என்று ஜபியுங்கள்! க்ருஷ்ணரையே வழிபடுங்கள்! க்ருஷ்ணரைப் பற்றிய உபதேசங்களையே (ஸிக்ஷா) அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள்!”
(3) அபராதங்களிலிருந்து (குறிப்பாக வைஷ்ணவ அபராதங்களிலிருந்து) எப்போதும் கவனமாக விலகியிருங்கள். பிரபு க்ருஷ்ணரின் புனித நாமத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பகவான் ஶ்ரீ க்ருஷ்ணரே உங்களது உண்மையான தாய், தந்தை மற்றும் வாழ்வின் ஒரே பொக்கிஷமும் (உயிர்நாடியும்) ஆவார்.
(4) பாவச் செயல்கள் (அனாசாரம்) அனைத்தையும் கைவிட்டு, உலகச் செயல்கள் அனைத்தையும் க்ருஷ்ணருடனான உறவை அடைவதற்காக மட்டுமே செய்ய வேண்டும். அனைத்து ஜீவன்களிடமும் கருணை காட்டி (ஜீவ காருண்யம்), க்ருஷ்ணரின் புனித நாமத்தைப் பரப்புவதே எல்லா மதங்களின் உன்னத சாராம்சமாகும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆