கௌர-ஆரதி
(பாடல் தொகுப்பு: கீதாவலீ)
(1)
(கிபா) ஜய ஜய கோராசந்தேர ஆரதிக ஷோபா
ஜாஹ்னவீ-தட-வனே ஜக-மன-லோபா ஜக-ஜன-மன-லோபா
(முதல் பல்லவி)
கௌராங்கேர ஆரோதிக ஷோபா ஜக-ஜன-மன-லோபா
(2)
தக்ஷிணே நிதாஇசந்த, வாமே கதாதர
நிகடே அத்வைத, ஶ்ரீநிவாஸ சத்ர-தர
(3)
பஸியாசே கோராசந்த ரத்ன-ஸிம்ஹாஸனே
ஆரதி கரேன ப்ரஹ்மா-ஆதி தேவ-கணே
(4)
நரஹரி-ஆதி கரி சாமர துலாய
ஸஞ்ஜய-முகுந்த-வாஸு-கோஷ-ஆதி காய
(5)
ஷங்க பாஜே கண்டா பாஜே பாஜே கரதால
மதுர மருதங்க பாஜே பரம ரஸால
(இரண்டாவது பல்லவி)
ஷங்க பாஜே கண்டா பாஜே
மதுர மதுர மதுர பாஜே
(6)
பஹு-கோடி சந்த்ர ஜினி வதன உஜ்ஜ்வல
கல-தேஷே வன-மாலா கரே ஜலமல
(7)
ஷிவ-ஷுக-நாரத ப்ரேமே கதகத
பகதிவினோத தேகே கோரார ஸம்பத
பாடலின் பொருள்
(1) சந்திரனைப் போன்ற ஶ்ரீ சைதன்யரின் அழகான ஆரத்திக்கு எல்லாப் புகழும் உரித்தாகட்டும்! கங்கைக் கரையிலுள்ள வனத்தில் நிகழ்த்தப்படும் இந்த கௌர ஆரத்தி பிரபஞ்சத்திலுள்ள அனைவரது மனதையும் கவருகின்றது.
(2) சைதன்ய மஹாபிரபுவின் வலது புறத்தில் நித்யானந்த பிரபு உள்ளார். அவரது இடது புறத்தில் ஶ்ரீ கதாதரர் உள்ளார். அருகில் ஶ்ரீ அத்வைதர் உள்ளார்; ஶ்ரீவாஸ தாகூர் ஶ்ரீ சைதன்யரின் தலைக்குமேல் குடையைப் பிடித்தபடி உள்ளார்.
(3) கௌரசந்திரர் இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார்; பிரம்மதேவரின் தலைமையிலான தேவ கணங்கள் அவருக்கு ஆரத்தி புரிகின்றனர்.
(4) நரஹரி ஸரகாரரின் தலைமையிலான ஶ்ரீ சைதன்யரின் சகாக்கள் அவருக்கு சாமரம் வீசுகின்றனர்; ஸஞ்ஜய பண்டிதர், முகுந்த தத்தர், வாஸுகோஷ் முதலிய பக்தர்கள் இனிமையான கீர்த்தனத்தைப் பாடுகின்றனர்.
(5) சங்குகள், மணிகள், கரதாளங்கள் ஒலிக்கின்றன; மிருதங்கம் மிகவும் இனிமையாக வாசிக்கப்படுகின்றது. இந்த கீர்த்தன இசை பரம இனிமையுடன் கேட்பவர்களுக்கு இன்பம் தருவதாக உள்ளது.
(6) ஶ்ரீ சைதன்யருடைய திருமுகத்தின் பிரகாசம் கோடிக்கணக்கான நிலவொளியை வெற்றிகொள்கிறது; காட்டு மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை அவரது கழுத்தில் பிரகாசிக்கின்றது.
(7) சிவபெருமான், சுகதேவ கோஸ்வாமி, நாரத முனிவர் என அங்கு கூடியிருந்த அனைவரும் பிரேமையின் மாபெரும் பரவசத்தில் குரல் தழுதழுத்து நிற்கின்றனர். இவ்வாறு பக்திவினோதன் பகவான் ஶ்ரீ சைதன்யரின் பெருமைகளை தரிசிக்கின்றான்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆