யாவல் லிங்கபன்விதேோ ஹி ஆத்மா தாவத் கர்ம – நிபந்தனம்
தேதா விபர்யய: க்லே சோ மாயா – யோகோ ‘நுவர்த்ததே
மொழிபெயர்ப்பு
ஆத்மாவானவன் மனம், புத்தி, பொய், அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் மூடப்பட்டிருக்கும் வரை, அவனது கர்ம பலன்களால் அவன் பந்திக்கப்படுகிறான். இந்த மறைப்பின் காரணத்தால் ஆத்மா ஜட சக்தியுடன் சம்பந்தப்படுவதால், அதற்கேற்ப அவன் தொடர்ந்து பிறவிக்குப்பின் பிறவியாக பௌதிக சூழ்நிலைகளையும் எதிரிடையான சூழ்நிலைகளையும் அனுபவிக்க வேண்டும்.
பொருளுரை
ஜீவராசியானவன் மனம், புத்தி, பொய் அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் பந்திக்கப்படுகிறான். ஆகவே மரணத்தருவாயில் ஏற்படும் மனநிலையே அடுத்த உடலுக்குக் காரணமாகிறது. பகவத் கீதை (8.6) உறுதி செய்வதுபோல், யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜதி அந்தே கலேவரம். மரணத்தருவாயில் ஆத்மா வேறொரு வகையான உடலுக்கு மாறுவதற்கு மனமே அடிப்படைத் தத்துவமாக அமைகிறது. ஒரு ஜீவராசி தன் மனதின் உத்தரவை எதிர்த்து, மனதை பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுத்துவானாயின், அவனுடைய மனதால் அவனை இழிவு படுத்தமுடியாது. எனவே மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்துவதே மானிடர்களின் கடமையாகும் (ஸ வை மண: க்ருஷ்ண – பதார விந்தயோ:). மனம் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது புத்தி தூய்மையடைகிறது. அதன்பிறகு புத்தி பரமாத்மாவிடமிருந்து அகத் தூண்டுதலைப் பெறுகிறது (ததாமி புத்தி யோகம் தம்). இவ்விதமாக ஜீவராசி பௌதிக பந்தத்திலிருந்து முக்தியை நோக்கி முன்னேறுகிறான். தனிப்பட்ட ஜீவாத்மா கர்ம விதிகளுக்கு கட்டுப்பட்டுள்ளான். ஆனால் பரமாத்மாவோ தனிப்பட்ட ஜீவராசியின் கர்மங்களால் பாதிப்படைவதில்லை. வேத உபநிஷத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது போல, இரு பறவைகளுக்கு ஒப்பிடப்படும் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் உடலுக்குள் அமர்ந்துள்ளனர். ஜீவாத்மா உடலின் செயல்கள் என்ற பழங்களை உண்பதன் மூலம் இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிக்கிறது. ஆனால் இத்தகைய பந்தத்திலிருந்து விடுப்பட்டுள்ள பரமாத்மா தனிப்பட்ட ஆத்மாவின் விருப்பங்களுக்கேற்ப அவனுடைய செயல்களுக்கு சாட்சியாக இருந்து, அதற்கு அனுமதியளிக்கிறார்.
(ஸ்ரீமத்-பாகவதம் 7.2.47 / பொருளுரை )
முந்தைய ஸ்லோகத்தின் தொடர்பு
ஜீவாத்மா பௌதிக உலகத்தில் எவ்வாறு பந்தப்படுகிறான் என்பதையும், உடலை மாற்றுவதற்குக் காரணமான சூட்சுமக் கட்டமைப்பையும் விளக்கிய பிறகு, இந்த ஸ்லோகம் அந்தச் சூட்சும பந்தம் நீடிக்கும் வரை ஆத்மாவிற்கு ஏற்படும் தொடர் விளைவுகளையும், அதிலிருந்து விடுபெறும் வழியையும் விரிவாக விளக்குகிறது.
ஸ்லோகத்தின் முக்கியக் கருத்துக்கள் (புள்ளி விவரமாக):
சூட்சும உடலின் பந்தம்: ஆத்மாவானவன் மனம், புத்தி, அகங்காரம் ஆகியவையடங்கிய சூட்சும உடலால் மூடப்பட்டிருக்கும் வரை, தன் கர்ம பலன்களால் தொடர்ந்து பந்தப்படுகிறான்.
பிறவிச் சுழற்சியும் துன்பங்களும்: இந்த மறைப்பின் காரணமாக ஆத்மா ஜட சக்தியோடு சம்பந்தப்படுவதால், அதற்கேற்பத் தொடர்ந்து பிறவிக்குப்பின் பிறவியாகப் பௌதிகச் சூழ்நிலைகளையும், எதிரிடையான சூழ்நிலைகளையும் அனுபவிக்க வேண்டியுள்ளது.
மரணத்தருவாயில் மனதின் பங்கு: மரணத்தருவாயில் ஏற்படும் மனநிலையே ஆத்மா அடுத்து அடையும் உடலுக்குக் காரணமாக அமைகிறது (பகவத் கீதை 8.6 – யம் யம் வாபி ஸ்மரன் பாவம்…).
மனதைக் கட்டுப்படுத்துவதன் அவசியம்: ஜீவராசி தன் மனதின் உத்தரவை எதிர்த்து, அதை பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுத்தினால் (ஸ வை மண: க்ருஷ்ண – பதார விந்தயோ:), மனதால் அவனுக்கு இழிவு ஏற்படாது.
புத்தி தூய்மையடைதல்: மனம் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது புத்தி தூய்மையடைந்து, பரமாத்மாவிடமிருந்து அகத் தூண்டுதலைப் பெறுகிறது (ததாமி புத்தி யோகம் தம்). இதன் மூலம் ஜீவன் முக்தியை நோக்கி முன்னேறுகிறான்.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் (இரு பறவைகள்): வேத உபநிஷத்தில் கூறியபடி, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் உடலாகிய மரத்தில் இருக்கும் இரு பறவைகளுக்கு ஒப்பிடப்படுகின்றனர்.
கர்ம விதியும் பரமாத்மாவின் நிலையும்: ஜீவாத்மா உடலின் செயல்களாகிய பழங்களை உண்பதன் மூலம் இன்ப துன்பங்களை அனுபவித்து கர்ம விதிகளுக்குக் கட்டுப்படுகிறான். ஆனால், இத்தகைய பந்தத்திலிருந்து விடுபட்டுள்ள பரமாத்மா, ஜீவாத்மாவின் கர்மங்களால் பாதிப்படைவதில்லை; அவன் ஜீவாத்மாவின் விருப்பங்களுக்கேற்பச் செயல்களுக்குச் சாட்சியாக இருந்து அனுமதியளிக்கிறார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆