யமராஜனும் அவரது தூதர்களும் ஓர் உயிரினை நியாயத்தீர்ப்பிற்கு அழைத்துச் செல்லும்பொழுது, உயிர், உயிர்க்காற்று, மற்றும் ஆசைகள் என்னும் அவனது துணைவர்களும் அவனுடன் செல்கின்றனர். இது வேதங்களிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஓர் உயிர் எடுத்துச் செல்லப்படும்பொழுதோ அல்லது யமராஜனால் (தம் உத்க்ராமந்தம்) கைது செய்யப்படும்பொழுதோ உயிர்க்காற்றும் அவனுடன் சேர்ந்தே செல்கிறது (ப்ராணோ (அ)னுத்க்ரமதி). இவ்வாறு உயிர்க்காற்று செல்லும்பொழுது (ப்ராணம் அனுத்க்ராமந்தம்) அனைத்துப் புலன்களும் (ஸர்வே ப்ராணா:) அதனுடன் சேர்ந்து செல்கின்றன (அனுத்க்ராமந்தி). உயிரும், உயிர்க்காற்றும் செல்லும்பொழுது நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்னும் ஐம்பூதங்களினால் செய்யப்பட்ட விஷயம் புறக்கணிக்கப்பட்டு, பின்தள்ளப்படுகிறது. பின்னர் அவன் யமராஜனின் நீதிஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே அவன் எந்த உடலைப் பெறப்போகிறான் என்பதை யமராஜன் தீர்மானிக்கிறார். இம்முறை நவீன விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. ஒவ்வொரு உயிரும் இம்மையில் தான் செய்யும் செயலுக்கு அவனே யமராஜனின் நீதிஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அவன் அடுத்துப் பெறப்போகும் உடல் என்னவென்று தீர்மானிக்கப்படுகிறது. பூதவுடல் நீங்கியபோதிலும், உயிரும், அவனது ஆசைகளும், அவனது முந்தைய வினைப்பயன்களும் தொடர்ந்து வருகின்றன. ஒருவனது முன்வினைப்பயனுக்கேற்ப அடுத்து அவனுக்கு எந்தவுடலைக் கொடுக்கலாம் என்பதை யமராஜனே தீர்மானிக்கிறார்.
(ஶ்ரீமத்-பாகவதம் 4.28.23 / பொருளுரை)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
