அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் ச
ஸம்ஷயாத்மா வினஷ்யதி
நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ
ந ஸுகம் ஸம்ஷயாத்மன
மொழிபெயர்ப்பு
ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை.
பொருளுரை
தரமான, அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களில் பகவத் கீதையே மிகச்சிறந்ததாகும். மிருகங்களைப் போல இருக்கும் மனிதர்களுக்கு சாஸ்திரத்தின் மீது நம்பிக்கையோ சாஸ்திர ஞானமோ இல்லை; சிலர், சாஸ்திரங்களைப் பற்றி அறிந்திருந்தாலும், அவற்றின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட முடிந்தாலும், அச்சொற்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. வேறு சிலர், பகவத் கீதையைப் போன்ற சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்திருந்தாலும், புருஷோத்தமரான பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் வழிபாட்டில் நம்பிக்கை கொள்வதில்லை. அத்தகைய நபர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்க இயலாது. அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட நபர்களில், நம்பிக்கையின்றி எப்போதும் சந்தேகத்தில் உழல்பவர்கள், எவ்வித முன்னேற்றமும் அடைவதில்லை. கடவுளிடமும் அவரது சொற்களிலும் நம்பிக்கையற்ற மனிதர்கள், இவ்வுலகிலோ மறு உலகிலோ எந்த நன்மையும் அடைவதில்லை. அவர்களுக்கு சுகம் என்பதே இல்லை என்று கூறலாம். எனவே, சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள கொள்கைகளை நம்பிக்கையுடன் பின்பற்றி, ஞானத்தின் நிலைக்கு உயர்வு பெற வேண்டும். இந்த ஞானம் மட்டுமே ஆன்மீக விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கான உன்னத தளத்திற்கு ஒருவனை உயர்த்தக்கூடியது. வேறு விதமாகக் கூறினால், சந்தேகமுடைய நபர்களுக்கு ஆன்மீக விடுதலைக்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே, சீடப் பரம்பரையில் வரும் சிறந்த ஆச்சாரியர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, வெற்றியடைய வேண்டும்.
( பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் நான்கு / பதம் 40 )
கேள்விகள் மற்றும் பதில்கள்
கேள்வி 1: இறையுணர்வை அடையாமல் வீழ்ச்சியடையும் மனிதர்கள் யார்?
பதில்: சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள் இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர்.
கேள்வி 2: சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு எங்கு இன்பம் இல்லை?
பதில்: சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ அல்லது மறு உலகிலோ இன்பம் இல்லை.
கேள்வி 3: தரமான, அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களில் மிகச்சிறந்தது எது?
பதில்: பகவத் கீதையே மிகச்சிறந்த சாஸ்திரமாகும்.
கேள்வி 4: சாஸ்திரங்களைப் பற்றி அறிந்த சிலரிடம் காணப்படும் குறைபாடு என்ன?
பதில்: சிலர் சாஸ்திரங்களைப் பற்றி அறிந்திருந்தாலும், அவற்றின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட முடிந்தாலும், அச்சொற்களில் அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை.
கேள்வி 5: சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்திருக்கும் வேறு சிலரின் தவறு என்னவாக இருக்கிறது?
பதில்: அவர்கள் பகவத் கீதையைப் போன்ற சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்திருந்தாலும், புருஷோத்தமரான பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் வழிபாட்டில் நம்பிக்கை கொள்வதில்லை. இவர்களால் கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்க இயலாது; வீழ்ச்சியடைகின்றனர்.
கேள்வி 6: எவ்வித முன்னேற்றமும் அடையாதவர்கள் யார்?
பதில்: நம்பிக்கையின்றி எப்போதும் சந்தேகத்தில் உழல்பவர்கள் எவ்வித முன்னேற்றமும் அடைவதில்லை.
கேள்வி 7: கடவுளிடமும் அவரது சொற்களிலும் நம்பிக்கையற்ற மனிதர்களின் நிலை என்ன?
பதில்: அவர்கள் இவ்வுலகிலோ மறு உலகிலோ எந்த நன்மையும் அடைவதில்லை. அவர்களுக்கு சுகம் என்பதே இல்லை என்று கூறலாம்.
கேள்வி 8: மனிதன் ஞானத்தின் நிலைக்கு உயர்வு பெற என்ன செய்ய வேண்டும்? பதில்: சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள கொள்கைகளை நம்பிக்கையுடன் பின்பற்றி, ஞானத்தின் நிலைக்கு உயர்வு பெற வேண்டும்.
கேள்வி 9: ஆன்மீக விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கான உன்னத தளத்திற்கு ஒருவனை உயர்த்தக்கூடியது எது?
பதில்: சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் பின்பற்றுவதால் ஏற்படும் ஞானம் மட்டுமே ஒருவனை உன்னத தளத்திற்கு உயர்த்தக்கூடியது.
கேள்வி 10: சந்தேகமுடைய நபர்களுக்கு ஆன்மீக விடுதலையில் இருக்கும் வாய்ப்பு என்ன?
பதில்: சந்தேகமுடைய நபர்களுக்கு ஆன்மீக விடுதலைக்கான வாய்ப்பு சிறிதும் இல்லை.
கேள்வி 11: வாழ்க்கையில் வெற்றியடைய யாரைப் பின்பற்ற வேண்டும் என்று உரை கூறுகிறது?
பதில்: சீடப் பரம்பரையில் வரும் சிறந்த ஆச்சாரியர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வெற்றியடைய
வேண்டும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆