அந்த-காலே ச மாம் ஏவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்-பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய:
மொழிபெயர்ப்பு:
மேலும், தனது வாழ்வின் இறுதி காலத்தில், யாராவது என்னை மட்டும் எண்ணிக் கொண்டு உடலை விட்டால், உடனடியாக அவன் என்னுடைய இயற்கையை அடைகிறான். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
பொருளுரை:
இப்பதத்தில் கிருஷ்ண உணர்வின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ண உணர்வுடன் தனது உடலை நீக்கும் எவரும், உடனடியாக பரம புருஷரின் திவ்யமான இயற்கைக்கு மாற்றப்படுகின்றனர். பரம புருஷர் தூய்மையானவற்றில் தூய்மையானவர் ஆவார். எனவே, தொடர்ந்து கிருஷ்ண உணர்வில் இருப்பவரும் தூய்மையானவற்றில் தூய்மையானவர் ஆவார். ஸ்மரன் (நினைவு கொள்ளுதல்) எனும் சொல் முக்கியமானதாகும். பக்தித் தொண்டின் மூலம் கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்யாத, தூய்மையற்ற ஆத்மாவிற்கு கிருஷ்ணரது நினைவு சாத்தியமல்ல. எனவே, கிருஷ்ண உணர்வை வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே பயிற்சி செய்ய வேண்டும். தனது வாழ்வின் இறுதியில் வெற்றியை அடைய ஒருவன் விரும்பினால், கிருஷ்ணரை நினைவு கொள்ளக்கூடிய வழிமுறை இன்றியமையாததாகும். எனவே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே எனும் மஹாமந்திரத்தை தொடர்ந்து இடைவிடாமல் ஜபிக்க வேண்டும். மரத்தைப் போல பணிவாக இருக்க வேண்டும் (தரோர் இவ ஸஹிஷ்ணுனா) என்று பகவான் சைதன்யர் அறிவுறுத்தியுள்ளார். ஹரே கிருஷ்ண ஜபம் செய்பவனுக்கு பல்வேறு தடைகள் இருக்கலாம். இருப்பினும், அத்தடைகளை பொறுத்துக் கொண்டு, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். இதன் மூலம், அவன் தனது வாழ்வின் இறுதியில் கிருஷ்ண உணர்வின் முழு பலனை அடைய முடியும்.
ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவல் 8.5
ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் 8.5 — முக்கியக் குறிப்புகள்:
இறுதி கால நினைவு மற்றும் பகவத் பவம்: தனது வாழ்வின் இறுதி காலத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மட்டுமே எண்ணிக் கொண்டு உடலை நீப்பவன் உடனடியாக பகவானுடைய திவ்யமான இயற்கையை (மத்-பாவம்) அடைகிறான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
கிருஷ்ண உணர்வின் முக்கியத்துவம்: இப்பதத்தில் கிருஷ்ண உணர்வின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திவ்யமான இயற்கைக்கு மாறுதல்: கிருஷ்ண உணர்வுடன் தனது உடலை நீக்கும் எவரும், உடனடியாக பரம புருஷரின் திவ்யமான இயற்கைக்கு மாற்றப்படுகின்றனர்.
தூய்மையின் சிகரம்: பரம புருஷர் தூய்மையானவற்றில் தூய்மையானவர் என்பதால், தொடர்ந்து கிருஷ்ண உணர்வில் இருப்பவரும் தூய்மையானவற்றில் தூய்மையானவர் ஆவார்.
‘ஸ்மரன்’ (நினைவு கொள்ளுதல்): ஸ்மரன் எனும் சொல் மிகவும் முக்கியமானதாகும்; பக்தித் தொண்டின் மூலம் கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்யாத, தூய்மையற்ற ஆத்மாவிற்கு கிருஷ்ணரது நினைவு சாத்தியமல்ல.
ஆரம்பத்திலிருந்தே பயிற்சி: தனது வாழ்வின் இறுதியில் வெற்றியை அடைய ஒருவன் விரும்பினால், கிருஷ்ணரை நினைவு கொள்ளக்கூடிய வழிமுறை இன்றியமையாதது என்பதால், கிருஷ்ண உணர்வை வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே பயிற்சி செய்ய வேண்டும்.
மஹாமந்திர ஜபம்: எனவே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே எனும் மஹாமந்திரத்தை தொடர்ந்து இடைவிடாமல் ஜபிக்க வேண்டும்.
பகவான் சைதன்யரின் அறிவுரை: மரத்தைப் போல பணிவாக இருக்க வேண்டும் (தரோர் இவ ஸஹிஷ்ணுனா) என்று பகவான் ஶ்ரீ சைதன்யர் அறிவுறுத்தியுள்ளார்.
தடைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்: ஹரே கிருஷ்ண ஜபம் செய்பவனுக்கு பல்வேறு தடைகள் இருக்கலாம்; இருப்பினும், அத்தடைகளைப் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும்.
முழு பலன் அடைதல்: இதன் மூலம், ஒருவன் தனது வாழ்வின் இறுதியில் கிருஷ்ண உணர்வின் முழு பலனை அடைய முடியும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆