அபைஷுனம் என்றால், அவசியமின்றி பிறரிடம் குற்றம் காணவோ, அவர்களைத் திருத்தவோ கூடாது என்று பொருள். திருடனைத் திருடன் என்று கூறுவது குற்றம் காண்பதல்ல என்பது உண்மையே, ஆனால் நேர்மையான மனிதனைத் திருடன் என்று கூறுவது ஆன்மீக வாழ்வில் முன்னேறிக் கொண்டிருப்பவனுக்கு மிகவும் ஆபத்தானதாகும். ஹ்ரீ என்றால், ஒருவன் மிகுந்த நாணத்துடன் இருக்க வேண்டும் என்றும், மோசமான செயல்களைச் செய்யக் கூடாது என்றும் பொருள். அசாபலம், மனவுறுதி என்றால், ஒருவன் தனது முயற்சியில் கிளர்ச்சியடையவோ, விரக்தியடையவோ கூடாது என்று பொருள். சில முயற்சிகளில் தோல்வி இருக்கலாம், ஆனால் அதற்காக அவன் வருத்தப்படக் கூடாது; பொறுமையுடனும் உறுதியுடனும் முன்னேற்றம் காண வேண்டும். (பகவத் கீதை உண்மையுருவில் 16.2 – பொருளுரை)
வைஷ்ணவனுடைய தகுதிகளில் ஒன்று அதோஷ தர்ஷீ என்பதாகும், அவன் ஒருபோதும் மற்றவர்களுடைய குற்றங்களைக் காண்பதில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் நற்குணங்கள், குற்றங்கள் என இரண்டும் இருப்பது உண்மையே. எனவே “ஸஜ்ஜனா குணமிச்சந்தி தோஷமிச்சந்தி பாமரா” – அனைவருமே தோஷங்களும் பெருமைகளும் கலந்த கலவையாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் நிதான புத்தியுடைய வைஷ்ணவன் ஒரு மனிதனின் பெருமைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான், அவனது குறைகளைக் காண்பதில்லை. ஈக்கள் புண்களை நோக்கிச் செல்கின்றன, ஆனால் தேனீக்கள் தேனைத் தேடுகின்றன. (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை 8.62 – பொருளுரை)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆