இந்த ஜட உலகிலுள்ள ஒவ்வொருவரும் கஷ்டமான சூழ்நிலைகளால் துன்புறுகின்றனர். ஆனால் இவ்வுலகம் இன்பம் நிறைந்தது என்று ஶ்ரீல பிரபோதானந்த சரஸ்வதி கூறுகிறார். இது எவ்வாறு சாத்தியமாகும்? இதற்கு அவர், யத்-காருண்ய-கடாக்ஷ-வைபவவதாம் தம் கௌரம் ஏவ ஸ்தும: என்று பதிலளிக்கிறார். அதாவது, ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் காரணமற்ற கருணையினால்தான் இந்த ஜட உலகத் துன்பத்தையும் மகிழ்ச்சியாக ஒரு பக்தன் ஏற்றுக்கொள்கிறான்.
ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதன் மூலமாக ஶ்ரீ சைதன்ய மகாபிரபு ஒருபோதுமே துன்புற்றதே இல்லை, மாறாக மகிழ்ச்சியுடையவராகவே இருந்திருக்கிறார் என்பது அவரது சொந்த வாழ்விலிருந்து தெளிவாகிறது. ஒருவன் ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பற்றி, எப்பொழுதும்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
என்ற மகா மந்திரத்தைப் பாட வேண்டும். அப்பொழுது இந்த இருமை உலகின் துன்பங்களை அவன் ஒருபோதும் உணரமாட்டான். பகவானின் புனித நாமத்தைப் பாடுபவன் வாழ்வின் எந்த நிலையிலும் மகிழ்ச்சியாகவே இருப்பான்.
( ஶ்ரீமத் பாகவதம் 6.17.30 / பொருளுரை வழங்கியவர் ஶ்ரீல பிரபுபாதர் )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆