பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யத் திட்டமிடும் மனிதர்கள் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ளத் தகுதி இல்லாதவர்கள். பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டாகிய ஆட்சியில் நுழைய முடியாது. மேலும், உள்நோக்கத்துடன் மிகவும் செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள் என்போர் உள்ளனர். அவர்களால் கிருஷ்ண உணர்வு நிலை அல்லது பக்தித் தொண்டைப் புரிந்துகொள்ளவும் முடியாது. மத நம்பிக்கையின் மற்றொரு உட்பிரிவால் துவக்கப்பட்டு, பரம புருஷ பகவானை அணுகுவதற்குப் பொது மேடையாக பக்தித் தொண்டைக் கொள்ளாதவர்களும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது. சில மாணவர்கள் நம்முடன் சேர்வதற்கு வருகின்றனர் எனும் அனுபவம் நமக்கு உண்டு, ஆனால் சில குறிப்பிட்ட வகையான நம்பிக்கையில் ஒரு புறச் சாய்வாக இருப்பதால் அவர்கள் நமது பாசறையை விட்டுச் சென்று, பாலைவனத்தில் விடப்படுகிறார்கள். உண்மையில், கிருஷ்ண உணர்வு நிலை ஒரு கிளைப்பிரிவினரின் மத நம்பிக்கை இல்லை; அது பகவானையும் அவருடனான நமது உறவையும் புரிந்து கொள்வதற்கான கற்பிக்கும் முறையாகும். இந்த இயக்கத்தில் யாரும் தப்பெண்ணம் இன்றிச் சேரலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வேறு மாதிரி உணர்பவர்களும் இருக்கின்றனர். அதனால், அந்த மனிதர்களுக்கு கிருஷ்ண உணர்வின் உண்மையினை அறிவுறுத்தாமல் இருப்பது நல்லது.
பொதுவாக, உலோகாயதவாதிகள் பெயர், புகழ், உலகப் பயன் இவற்றின் பின் செல்பவர்கள். அதனால் இந்தக் காரணங்களுக்காக, கிருஷ்ண உணர்வு நிலையை ஒருவர் மேற்கொண்டால், அவரால் இந்தத் தத்துவத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள இயலாது. அந்த மனிதர்கள் மதக் கோட்பாடுகளைச் சமூக அலங்காரமாக எடுத்துக் கொள்கிறார்கள். சிறப்பாக இந்தக் காலத்தில், அவர்கள் தங்களைச் சில பண்பாட்டு நிறுவனத்தில் பெயருக்காக மட்டும் சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த மனிதர்களாலும் கிருஷ்ண உணர்வு நிலைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள இயலாது. ஒருவர் உலக உடைமைகளுக்காகப் பேராசைப் படாவிட்டாலும், குடும்ப வாழ்வில் அதிகப் பற்றுள்ளவரானால், அவராலும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது. மேலோட்டமாகப் பார்ப்பதால், அவர்கள் உலக உடைமைகளுக்காக மிகவும் பேராசைப்படுவதில்லை. ஆனால் அவர்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றத்தில் அதிகப் பற்றுடையவர்கள். ஒருவர் மேலே குறிப்பிட்ட தவறுகளால் மாசு அடையாத பொழுதும், இறுதியில் பரம புருஷ பகவானின் தொண்டில் ஆர்வம் கொள்ளவில்லை என்றால் அல்லது அவர் பக்தர் இல்லையென்றால், அவராலும் கிருஷ்ண உணர்வு நிலைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆