ஓஹே வைஷ்ணவ தாகுர தோயார சாகர
(அருளியவர்: ஶ்ரீல பக்தி வினோத தாகூர்)
(1)
ஓஹே வைஷ்ணவ தாகுர தோயார சாகர
ஏ தாஸே கோருணா கோரி
தியா பத-சாயா சோதோ ஹே ஆமாயா
தோமார சரண தோரி
(2)
சய பேக தோமி சய தோஷ சோதி
சய குண தேஹோ தாஸே
சய ஸத்-சங்க தேஹோ ஹே ஆமாரே
போசேசி ஸங்கேர ஆசே
(3)
ஏகாகி ஆமார நாஹி பாய பல
ஹரிநாம ஸங்கீர்தன
துமி க்ருபா கோரி ஶ்ரத்தா-பிந்து தியா
தேஹோ க்ருஷ்ணநாம தனே
(4)
க்ருஷ்ண ஸே தோமார, க்ருஷ்ண திதே பாரே
தோமார ஸகதி அசே
ஆமி தோ காங்கல, க்ருஷ்ண க்ருஷ்ண போலி
தா தவ பாஸே பாஸ
மொழிபெயர்ப்பு
(1) பெருமதிப்பிற்குரிய வைஷ்ணவ தாகுரே, கருணையின் கடலே, என் மீது கருணை காட்டுவீராக. உமது திருவடி நிழலைக் கொண்டு இந்த சேவகனைத் தூய்மைப்படுத்துவீராக, நான் உமது திருவடிகளைப் பற்றிக் கொண்டுள்ளேன்.
(2) உமது தாஸனான எனது ஆறு உந்துதல்களைக் கட்டுப்படுத்தி, ஆறு தவறுகளைத் தூய்மைப்படுத்தி, ஆறு நற்குணங்களை எனக்கு அளிப்பீராக. ஆறு விதமான ஸத்சங்கத்தினையும் எனக்கு அளிப்பீராக. உமது சங்கத்தைப் பெறும் நோக்கத்துடன் நான் இங்கு அமர்ந்துள்ளேன்.
பதம் 2- இல் குறிப்பிட்டுள்ளவற்றின் விரிவான விளக்கம்
ஆறு உந்துதல்கள் (ஷட் வேகங்கள்): பேச்சு, மனம், கோபம், நாக்கு, வயிறு, மற்றும் பாலுறுப்பு ஆகியவற்றின் தூண்டுதல்கள்.
ஆறு தவறுகள் (ஷட் தோஷங்கள் / அத்யாஹாராதிகள்): தேவைக்கு அதிகமாக உண்ணுதல் அல்லது செல்வம் சேகரித்தல், பௌதிக நன்மைக்காக பெருமுயற்சி செய்தல், பௌதிக விஷயங்களைப் பற்றிய தேவையற்ற பேச்சு, சாஸ்திர நியமங்களில் அதிக பற்றுதல் கொண்டிருத்தல் அல்லது அவற்றைப் புறக்கணித்தல், உலக வாழ்வில் விருப்பம் கொண்டுள்ள நபர்களுடன் சங்கம் கொள்ளுதல், மற்றும் பௌதிகப் பொருட்களுக்கான பேராசை.
ஆறு நற்குணங்கள் (ஷட் குணங்கள் / உத்ஸாஹாதிகள்): உற்சாகம், பொறுமை, நம்பிக்கை, பக்தித் தொண்டிற்கு சாதகமான செயல்களைச் செய்வதில் உறுதி, அபக்தர்களின் சங்கத்தைத் துறப்பதில் திடமான நிலை, மற்றும் பூர்வீக ஆச்சாரியர்களின் அடிச்சுவடுகளை எப்போதும் பின்பற்றுவதற்குத் தேவையான ஒழுக்கம்.
ஆறு விதமான ஸத்சங்கம் (ஷட்வித ப்ரீதி லக்ஷணங்கள்): அன்பளிப்புகளை வழங்குதல், அன்பளிப்புகளைப் பெறுதல், பக்தித் தொண்டு குறித்த இரகசியமான வினாக்களை எழுப்புதல், இரகசியமான கருத்துக்களைப் பகிருதல், பிரசாதம் ஏற்றல், மற்றும் பிரசாதம் வழங்குதல்.
(3) தனிமையில் ஹரிநாம ஸங்கீர்த்தனம் புரிய எனக்கு பலமில்லை. எனவே, ஒரு துளி நம்பிக்கையை வழங்கி, க்ருஷ்ண நாமம் என்னும் பெரும் செல்வத்தை எனக்கு கருணையுடன் வழங்குங்கள்.
(4) க்ருஷ்ணர் தங்களுடையவர், அவரை என்னிடம் தருவதற்கான சக்தி தங்களிடம் உள்ளது; நானோ இழிவடைந்தவன். எனவே, “க்ருஷ்ண! க்ருஷ்ண!” என்று கூவிய வண்ணம் தங்களது பின்னால் ஓடி வருகின்றேன்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆