பதம் – 1
மதுரம் மதுரேப்யோ அபி
மங்களேப்யோ அபி மங்களம்
பாவனம் பாவனேப்யோ அபி
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
இனியவை அனைத்திலும் மிகவும் இனியது; மங்களம் அனைத்திலும் மிகவும் மங்களகரமானது; புனிதப்படுத்துபவை அனைத்திலும் உன்னதமாகப் புனிதப்படுத்துவது — அனைத்தும் பகவான் ஶ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
பதம் – 2
ஆபிரஹ்மா ஸ்தம்ப பர்யந்தம்
ஸர்வம் மாயா மயம் ஜகத்
ஸத்யம் ஸத்யம் புன : ஸத்யம்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
முழு பிரபஞ்சத்திலும் உயர்ந்தவரான பிரம்மா முதல் அற்பமான புல் வரை உள்ள அனைத்தும் பரமபுருஷருடைய ஜடசக்தியின் மாயப் படைப்புகளே ஆகும். ஒன்றே ஒன்று மட்டும் உண்மை, முழு உண்மை, மீண்டும் நான் சொல்கிறேன் முழு உண்மை — அனைத்தும் பகவான் ஶ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
பதம் – 3
ஸ குரு : ஸபிதா ச அபி
ஸா மாதா பந்தவோ அபி ஸ :
சிக்ஷயேக் சேத் சதா ஸ்மர்தும்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
ஒரு நபர் உண்மையான ஆசானோ, உண்மையான தந்தையோ, உண்மையான தாயோ அல்லது உண்மையான நண்பனோ யாராக இருந்தாலும், அவர்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ளுமாறு கற்பிக்க வேண்டியது — அனைத்தும் பகவான் ஶ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
பதம் – 4
நி : ஸ்வாஸே நாஹி விஸ்வாச
கதா ருத்தோ பவிஷ்யதி
கீர்த்தனிய மதோ பால்யாத்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
இறுதி மூச்சு எப்போது நின்றுவிடும் என்று ஒருவராலும் நிச்சயமாகக் கூற முடியாது; அப்போது நாம் பெருக்கிக் கொண்டிருக்கும் உலகியல் திட்டங்கள் யாவும் திடீரென்று துண்டிக்கப்படும். எனவே, அறிவுடையவர்கள் அனைவரும் சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே ஜபிக்கப் பழக வேண்டியது — அனைத்தும் பகவான் ஶ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
பதம் – 5
ஹரி : ஸதா வஸேத் தத்ர
யத்ர பாகவதா ஜனா :
காயந்தி பக்தி பாவேன
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
பிரபு ஹரி நித்யமாக வசிக்குமிடம் எதுவென்றால், தூய பக்தித் தொண்டின் பாவத்தில் உருகி, எந்நேரமும் தம் புகழைப் பாடும் ஆன்மீக முன்னேற்றம் அடைந்த பக்தர்களின் இதயங்களில்தான். அவர்கள் பாடுவது — அனைத்தும் பகவான் ஶ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
பதம் – 6
அஹோ து:கம் மஹா து:கம்
து:காத் து:காதரம் யத :
காச்சார்தம் விஷ்மிருதம் ரத்ன
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
அஹோ! என்ன ஒரு துக்கம், என்ன ஒரு பெருந்துக்கம்! இவ்வுலகில் உள்ள அனைத்து துன்பங்களைக் காட்டிலும் மிகவும் துன்புறுத்தக் கூடியது எதுவெனில், மக்கள் தமது அறியாமையினால் ஒரு சாதாரணக் கண்ணாடித் துண்டைப் பெறுவதற்காக, இந்த ரத்தினத்தை மறந்துவிட்டதுதான். அது — அனைத்தும் பகவான் ஶ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
பதம் – 7
தீயதாம் தீயதாம் கர்ணோ
நீயதாம் நீயதாம் வச :
கீயதாம் கீயதாம் நித்யம்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
ஒருவருடைய காதுகளால் மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டியதும், ஒருவருடைய வாக்கினால் திரும்பத் திரும்பப் பேசப்பட வேண்டியதும், அன்புடன் எப்போதும் பாடிப் பாடி மகிழ வேண்டியதும் — அனைத்தும் பகவான் ஶ ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
பதம் – 8
த்ருணீ க்ருத்ய ஜகத் ஸர்வம்
ராஜதே ஸகலோபரி
சித் ஆனந்த மயம் சுத்தம்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
அகில உலகமும் ஒரு புல்லைப் போன்று அற்பமானதே ஆகும். பரம புருஷருடைய ஆதிக்கத்தினால் தான் அவை பிரகாசிக்கின்றன. எப்பொழுதும் நித்தியமானதும், தெய்வீகப் பரவச உணர்வுடையதும், புனிதத்திலும் புனிதமானதுமானது — அனைத்தும் பகவான் ஶ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆