நாதி-வ்யாதி-ஜரா-க்லானி-துஹ்க-சோக-பய-க்லமா:
ம்ருத்யுஸ் சானிச்சதாம் நாஸீத் ராமே ராஜனி அதோக்ஷஜே
மொழிபெயர்ப்பு
பரமபுருஷராகிய பகவான் ராமச்சந்திரர் இவ்வுலகின் அரசராக இருந்தபோது, உடலாலும் மனதாலும் ஏற்படும் துன்பம், நோய், முதுமை, இழப்பு, சோகம், பயம் மற்றும் களைப்பு ஆகியவை சிறிதும் இல்லாதிருந்தன. மரணத்தை விரும்பாதவர்களுக்கு மரணம் கூடச் சம்பவிக்கவில்லை.
பொருளுரை
உலகப் பேரரசராக பகவான் ராமச்சந்திரர் இருந்ததால், இந்த வசதிகள் அனைத்தும் இருந்தன. மிகவும் மோசமான இக்கலியுகத்திலும் கூட இத்தகைய ஒரு சூழ்நிலையை உடனே அறிமுகப்படுத்த இயலும். கலி-காலே நாம-ரூபே க்ருஷ்ண-அவதார: இக்கலியுகத்தில் கிருஷ்ணர், ஹரே கிருஷ்ண, ஹரே ராம எனும் அவரது புனித நாமத்தின் உருவில் அவதரிக்கிறார். ராம-ராஜ்யம் மக்களால் மிகவும் விரும்பப்படுவதும், நன்மை பயக்கக்கூடியதுமாகும். இந்த ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பரப்புவதால், இக்கலியுகத்திலும் கூட இதே போன்ற ஒரு சூழ்நிலையை உடனே உருவாக்க முடியும்.
ஸ்ரீமத்-பாகவதம்-9.10.53 / பொருளுரை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆