உங்களுடைய சக்திக்கேற்ப சங்கல்பங்களை மேற்கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரை திருப்தி படுத்த முயலுங்கள். உங்களுடைய சக்தியை மீறிய சங்கல்பங்களை மேற்கொண்டு, மாதத்தின் பாதியில் விரதத்தை முறியடிப்பதை காட்டிலும் அது சிறந்தது.
⭐அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் (சூரிய உதயத்திற்கு 1 1/2 மணி நேரத்திற்கு முன்பு) எழுந்து குளித்த பிறகு, மங்கள ஆரத்தி செய்து அதன் பின்னர் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.
⭐உயர்ந்த வைஷ்ணவர்களின் சங்கத்தில் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்க முயற்சி செய்தல் நன்று. கார்த்திக் மாதத்தில் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பதன் மூலம் 18 புராணங்களையும் படித்த பலனை அடைய முடியும்.
⭐ஜபம் செய்யும் போதும் கீர்த்தனத்தின் போதும் கிருஷ்ணரின் திருநாமத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகமாக ஜபம் செய்வதும், குடும்பத்தினருடன் இணைந்து கீர்த்தனம் செய்வதும் சிறந்தது.
⭐மாதம் முழுவதும் பிரம்மச்சரிய விரதம் கடைபிடித்தல் அவசியம்.
⭐உங்களுக்குப் பிடித்தமான உணவு வகையினை ஒரு மாதத்திற்கு கைவிடுதல் நன்று. நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தால், தினசரி ஒருவேளை மட்டும் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
⭐துளசி தேவிக்கு தினமும் ஆரத்தி செய்து கீர்த்தனம் பாடி, ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுவதற்கு பிரார்த்தனை செய்யவும்.
⭐தூய பக்தர்களுக்கு தானம் வழங்குதல் நன்று.
⭐தினமும் சுவையான பதார்த்தங்களைப் படைத்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யுங்கள்.
⭐சாதுர்மாதத்தின் நான்காவது மாதம் என்பதால் தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் கார்த்திக் மாதத்தின்போது உளுத்தம் பருப்பினைத் தவிர்த்தல் அவசியம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனுஷ்டானங்கள் மட்டுமின்றி, பல்வேறு விளக்கமான அணுகுமுறைகள் ஹரி பக்தி விலாஸ் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆழமான அவ்விரதங்களை அனுஷ்டித்தல் அனைவருக்கும் சாத்தியமல்ல என்பதால் அவை இங்கு கொடுக்கப்படவில்லை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆