பகவானின் புறச் சக்தியான மாயையின் செயற்பாட்டினால், ஜட இயற்கை, தொடர்ந்த மாற்றத்திற்கு உள்ளாகிறது. (விதார). அப்படியானால், ஜட இயற்கையானது ஒரு விதத்தில் “உண்மையல்லாதது” (அஸத்). ஆனால் பகவான் பரம உண்மையாவார். எனவே ஒவ்வொரு பொருளிலும் அவர் இருப்பதால், ஒவ்வொரு பொருளும் அவருடைய சக்தியே என்பதால், ஜடப் பொருட்களும், சக்தியே ஒரு குறிப்பிட அளவு உண்மை நிலையைக் கொண்டுள்ளன. எனவே சிலர், ஜட சக்தியின் ஓர் அம்சத்தைப் பார்த்து, “இதுவே உண்மை நிலை” என்று எண்ணுகின்றனர். மற்றவர்களோ, ஜட சக்தியின் வேறொரு அம்சத்தைப் பார்த்து, “இல்லை, அதுவே உண்மைநிலை” என்று நினைக்கின்றனர். நாம் பந்தப்பட்ட ஆத்மாக்கள் என்பதால், ஜட இயற்கையின் வேறுபட்ட புறத் தோற்றங்களினால் நாம் மூடப்பட்டுள்ளோம். இவ்வாறாக, நம்முடைய களங்கப்பட்ட பார்வைக்கேற்பவே, பரம சத்தியத்தை அல்லது பரமபுருஷரை நாம் விவரிக்கிறோம். எனினும், ஜட இயற்கையின் மறைப்புக் குணங்களான, நம்முடைய பந்தப்பட்ட புத்தி, மனம் மற்றும் புலன்கள் போன்றவைகள் கூட (பரமபுருஷரின் சக்தி என்பதால்) உண்மையானவையே. எனவே, அனைத்துப் பொருட்களின் மூலமாகவும் பரமபுருஷரை நம்மால் உணர முடியும். எனவே தான் தற்போதைய பதம் , ப்ரதீயஸே: அதாவது, “நீங்கள் உணரப்படுகிறீர்கள்” என்று குறிப்பிடுகிறது. மேலும், ஜட இயற்கையின் மறைப்புக் குணங்கள் உண்டாக்கப்படவில்லை. என்றால், படைப்பினால் அதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. அதாவது பந்தப்பட்ட ஆத்மாக்கள் கடவுளை மறந்தும், தங்களால் இயன்றளவு சுகம் அனுபவித்தும், இறுதியில் அவர்கள் இத்தகைய ஒரு மாயையான எண்ணத்தின் பயனின்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே படைப்பின் நோக்கமாகும்.
(ஶ்ரீமத் பாகவதம் 10.63.38 / பொருளுரை / ஸ்ரீல பிரபுபாதர் )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆