ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா
மொழிபெயர்ப்பு
“”சண்டையும் கபடத்தனமும் நிறைந்த இந்த யுகத்தில் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, பகவானுடைய திருநாமங்களை உச்சரிப்பதே. இதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை.”
பொருளுரை:
இந்த யுகத்தின் மக்கள் மிகவும் வீழ்ச்சியுற்றவர்களாக இருப்பதால், அவர்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரித்தால் போதுமானதாகும். இதன் மூலமாக அவர்கள் உடல்சார்ந்த வாழ்விலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்குத் தகுதியுடையவர்களாகின்றனர். எல்லாக் களங்கங்களிலிருந்தும் தூய்மையடையாவிடில்,பகவானின் பக்தித்தொண்டில் ஈடுபட இயலாது. இது பகவத் கீதையில் (7.28) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:
யேஷாம் த்வந்த க.தம்’ பாபம்’ ஜனானாம்’ புண்ய-கர்மணாம்
தே த்,வந்த்,வ-மோஹ-நிர்முக்தா ப.ஜஐந்தே மாம்’ த்ருட, வ்ரதா:
“முற்பிறவிகளிலும் இப்பிறவியிலும் புண்ணியச் செயல்களில் ஈடுபட்டு, யாருடைய பாவ விளைவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டனவோ, யார் மயக்கத்தின் இருமைகளிலிருந்து பூரணமாக விடுபட்டுள்ளார்களோ, அவர்களே எனது பக்தித் தொண்டில் மனவுறுதியுடன் ஈடுபடுவர்.” இளைஞர்களும் யுவதிகளும் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை மிகவும் தீவிரமாக ஏற்பதைக் கண்டு சில நேரங்களில் மக்கள் ஆச்சரியமடைகின்றனர். தகாத பாலுறவு, அசைவ உணவு, போதைப் பொருட்கள், சூதாட்டம் ஆகிய பாவச் செயல்களைக் கைவிட்டு, ஆன்மீக குருவினால் வழங்கப்படும் விதிமுறைகளை ஸ்திரமாகப் பின்பற்றி, அவர்கள் எல்லாக் களங்கங்களிலிருந்தும் தூய்மையடைந்துவிட்டனர். எனவே, அவர்களால் பகவானின் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபட முடிகிறது.
இந்த கலி யுகத்தில் ஹரி கீர்த்தனம் மிகமிக முக்கியமானதாகும். பகவானின் திருநாம கீர்த்தனத்தின் முக்கியத்துவம் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வரும் பின்வரும் ஸ்லோகங்களில் (12.3.51-52) கூறப்பட்டுள்ளது:
கலேர் தோ,ஷ – நிதே, ராஜன்ன்
அஸ்தி ஹ்யேகோ மஹான் கு;ண:
கீர்தனாத், ஏவ க்ரு’ஷ்ணஸ்ய
முக்த-ஸங்க:, பரம்’ வ்ரஜேத்
க்ரு’தே யத்த்,யாயதோ விஷ்ணும்’
த்ரேதாயாம் ‘ யஜதோ மகை:,
த் வாபரே பரிசர்யாயாம்’
கலௌ தத் த ரி-கீர்தனாத்
“தோஷங்களின் கடலாக இருக்கும் இந்த கலி யுகத்தின் மிகமிக முக்கியமான தன்மை என்னவெனில், ஹரே கிருஷ்ண மந்திர கீர்த்தனத்தினாலேயே எல்லாக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டு பகவானின் ராஜ்ஜியத்தினுள் பிரவேசிப்பதற்கான தகுதியைப் பெற முடியும். ஸத்ய யுகத்தில் தியானத்தினாலும், திரேதா யுகத்தில் வெவ்வேறு யாகங்களைச் செய்வதாலும், துவாபர யுகத்தில் பகவான் கிருஷ்ணரின் விக்ரஹ வழிபாட்டினாலும் அடையப்பட்ட அதே தன்னுணர்வை, கலியுகத்தில் ‘ஹரே கிருஷ்ண’ எனும் திருநாமங்களை உச்சரிப்பதால் எளிதாக அடைய முடியும்.”
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்திய லீலை 6. 243