அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் ।
ஹ்ருதயம் மதுரம் கமனம் மது4ரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 1 ॥
வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம் ।
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 2 ॥
வேணு-ர்மதுரோ ரேணு-ர்மதுர:
பாணி-ர்மதுர: பாதௌ மதுரௌ ।
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 3 ॥
கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் ।
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 4 ॥
கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் ।
வமிதம் மதுரம் ஶமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 5 ॥
குஞ்ஜா மதரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா ।
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 6 ॥
கோபீ மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் முக்தம் மதுரம் ।
த்ருஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 7 ॥
கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டி ர்மதுரா ஸ்ருஷ்டி ர்மதுரா ।
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 8 ॥
॥ இதி ஶ்ரீமத்வல்லபாசார்யவிரசிதம் மதுராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
முகுந்தனின்
1. உதடுகள் இனிமை, திருமுகம் இனிமை, கண்கள் இனிமை, புன்னகை இனிமை, இதயம் இனிமை, நடையழகு இனிமை — அகிலாந்த நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை!
2. மொழிகள் இனிமை, குணநலன்கள் இனிமை, உடைகள் இனிமை, உதரமடிப்புகள் இனிமை, செயல்கள் இனிமை, பிரமிப்பூட்டும் பேச்சு இனிமை — அகிலாந்த நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை!
3. புல்லாங்குழல் இனிமை, பாதத்தூசிகள் இனிமை, கைகள் இனிமை, தாமரைப்பாதங்கள் இனிமை, ஆடல் இனிமை, நட்பு இனிமை — அகிலாந்த நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை!
4. பாடுவது இனிமை, மஞ்சள் வண்ண ஆடை இனிமை, உண்பதும் இனிமை, உறங்குவதும் இனிமை, அழகு இனிமை, திருநெற்றித் திலகம் இனிமை — அகிலாந்த நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை!
5. உன்னதச் செயல்கள் இனிமை, பரிபூரண சுதந்திரம் இனிமை, லீலைத் திருடுதல் இனிமை, அன்பு வேடிக்கை இனிமை, உதவுதல் இனிமை, உன்னதப் பரிமாற்றம் இனிமை — அகிலாந்த நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை!
6. ஆரத்தின் குஞ்சங்கள் இனிமை, மலர்மாலைகள் இனிமை, யமுனை நதி இனிமை, நதியின் ஓசை இனிமை, நதியின் தண்ணீர் இனிமை, தாமரை மலர்கள் இனிமை — அகிலாந்த நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை!
7. கோபியர்கள் இனிமை, லீலைகள் இனிமை, கூட்டங்கள் இனிமை, பண்டங்கள் இனிமை, உவகை இனிமை, விநயம் இனிமை — அகிலாந்த நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை!
8. கோபாலர்கள் இனிமை, பசுக்கூட்டங்கள் இனிமை, அழகிய கோல் இனிமை, படைப்புகள் இனிமை, அழித்தல் இனிமை, காத்தல் இனிமை — அகிலாந்த நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆