ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவத புராணம் / எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 5
பகவான் வாமனதேவர் பலி மகாராஜனிடம் யாசித்தல்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இப்பத்தொன்பதாம் அத்தியாயம், எப்படி பகவான் வாமனதேவர் மூன்றடி நிலத்தைத் தானமாகக் கேட்டார் என்பதையும், எப்படி பலி மகாராஜன் அவரது திட்டத்திற்குச் சம்மதித்தார் என்பதையும், பகவான் வாமனதேவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதிலிருந்து பலி மகாராஜனைச் சுக்ராசாரியர் எப்படி தடுத்தார் என்பதையும் விவரிக்கிறது.
வாமனதேவரை ஒரு பிராமணப் புத்திரரென்று எண்ணிய பலி மகாராஜன், அவர் விரும்பிய எதையும் கேட்கலாம் என்று அவரிடம் கூறினார். அப்போது பகவான் வாமனதேவர் இரண்யகசிபு மற்றும் இரண்யாக்ஷன் ஆகியோரின் வீரதீரச் செயல்களைப் புகழ்ந்து பேசினார். பலி மகாராஜன் பிறந்த குடும்பத்தை இவ்வாறு புகழ்ந்த பின், ராஜனிடம் அவர் மூன்றடி நிலத்தை யாசித்தார். இது மிகவும் அற்பமானதாகையால், இந்த நிலத்தைத் தானமாகக் கொடுக்க பலி மகாராஜன் ஒப்புக்கொண்டார்.
ஆனால் வாமனதேவர் தேவர்களின் நண்பரான விஷ்ணு என்பதைப் புரிந்துகொண்ட சுக்ராசாரியர், இந்த நிலத்தைக் கொடுக்க வேண்டாம் என்று பலி மகாராஜனைத் தடுத்தார். பலி மகாராஜனின் வாக்குறுதியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி சுக்ராசாரியர் அவருக்கு அறிவுரை கூறினார். மற்றவர்களை ஜெயிப்பது, கேலி செய்வது, ஆபத்துக்குத் தக்கவாறு இயங்குவது, மற்றவர்களின் நன்மைக்காகச் செயற்படுவது முதலான சூழ்நிலைகளில் ஒருவர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கலாம், அதில் தப்பில்லை என்று அவர் விளக்கினார். இந்தத் தத்துவத்தின் மூலமாக, பகவான் வாமனதேவருக்கு நிலத்தைக் கொடுப்பதிலிருந்து பலி மகாராஜனைச் சுக்ராசாரியர் தடுக்க முயன்றார்.
(ஶ்ரீமத்-பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 19)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆